search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் பலி"

    • 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் சென்றனர்.
    • சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17), பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் சென்றனர்.

    அப்போது கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்த நூஃபுலை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    • கிருஷ்ணன் கோவில், ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த வர் முனீஸ்வரன் (வயது29), ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று பெண் பயணியை ஏற்றிக்கொண்டு சவாரி புறப்பட்டார். வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாய மடைந்த முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    ஆட்டோவில் பயணம் செய்த கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த பேராசிரியை சைலஜா காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் கங்கா குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் வெற்றி கணேஷ்(26). இவர் சம்ப வத்தன்று தூத்துக்குடி -மதுரை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாய மடைந்த வெற்றி கணேஷ் பரிதாபமாக இறந்தார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நஞ்சுண்டன் என்பவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார்.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (வயது 71). சம்பவத்தன்று இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே நஞ்சுண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள ஜடயம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (78). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- அவினாசி ரோட்டில் தென்னம்பாளையம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம் வைகந்தன்கரை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (48), இவர் தனது மகன் மோகன் பிரசாத் மற்றும் உறவினர்கள் கோபிநாத், கோபால் ஆகியோருடன் ஒரு காரில் கோவைக்கு வந்தார்.

    காரை இந்திரா காந்தி ரோட்டை சேர்ந்த ராம்குமார் என்பவர் ஓட்டி வந்தார். கார் சேலம்- பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடினர். அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    மோகன் பிரசாத், கோபிநாத், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரக்கு வாகனம், பைக் மற்றும் தனியார் பஸ் மோதி 3 பேர் பலி.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விஜய்(25). இவர் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். சக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த விஜய் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் வழியிலேயே விஜய் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சகோதரர் அஜித் அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜபாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணிக்கு செல்வதற்காக சின்னமனூர்- உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரவணக்குமாரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்(70). தேவாரம்- போடி சாலையில் கோணம்பட்டி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் மாரியப்பன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார்.

    கடலூர்:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார் ஓட்டி வருகிறார். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

    இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    • மோட்டார் சைக்கிளில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
    • கலையரசனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவை:

    சேலத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 37). இவர் கோவையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கலையரசனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீரகேரளத்தை சேர்ந்தவர் சந்ேதாஷ்குமார் (27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செட்டிப்பாளையம் - வட சித்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சந்ேதாஷ்குமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (42). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் செல்வபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பெரியக்கடை வீதி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்துஉயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×