search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவைப்பு"

    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
    • பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமரடக்கி பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    நேற்று இரவு இந்த நீர் மோர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதில் பந்தல் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனியப்பன், தி.மு.க. நிர்வாகி ராமநாதன் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரியாபட்டி அருகே கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி பொக்லைன் எந்திரத்துக்கு தீவைக்கப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேலகல்லங்குளம் கிராமத்தில் பிரதீப் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இங்கு மதுரை மாவட்டம் சக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தமுருகன்(40) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஆனந்தமுருகன் பணம் தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து 4 பேர் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். சம்பவத்தன்று கல்கு வாரிக்கு வந்த அவர்கள் ஆனந்த முருகனிடம் தகராறு செய்து பணம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய தோடு அங்கு நிறுத்தியிருந்த 2 பொக்லைன் எந்திரத்துக்கு தீவைத்தனர். மேலும் ரூ.22 ஆயிரம் பணத்தையும் அபகரித்து கொண்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சிசுந்தரம், கடம்ப வனம், அய்யனார் என்ற கோசி மணி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் தொழிற்சாலை நடத்துபவர்களிடம் சமூகவிரோதிகள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்துள்ளது.இதனால் வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.

    தினமும் ரவுடிகளுக்கு கப்பம் கட்டும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வெள்ளமாசி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா்(வயது32). இவரது வீட்டு முன் 2இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் திடீரென இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

    இதையடுத்து வீட்டிலிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை அவா் ஆய்வு செய்த போது, மூகமுடி அணிந்து வந்த மா்ம நபா் தீ வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நாகாச்சி கிராமத்தை சோ்ந்த ஹரீஸ் (25) வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46). இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். அதிகாலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி மற்றும் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
    • மூன்று வீடுகள், கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது போலீஸ் ஜீப்பின் முன்பக்ககண்ணாடி உடைக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் மூன்று வீடுகள், கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜீப்பின் முன்பக்ககண்ணாடி உடைக்க ப்பட்டதுகபிஸ்த லம் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் படுகாயமடைந்தார். தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீ ந்திரன், பாபநாசம் துணைக் காவல்கண்காணிப்பாளர் பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார்கள் குவிக்கப்பட்டு இரவு முழுவதும் ராஜகிரி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் ராஜகிரி மெயின் ரோட்டில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ராஜகிரி பகுதி பதட்டமான சூழ்நிலையால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துபாப நாசம் காவல் ஆய்வா ளர் அழகம்மாள் வழக்கு ப்பதிவு செய்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

    ×