என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 310742
நீங்கள் தேடியது "bakasuran"
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பிறகு இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ‘பகாசூரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பகாசூரன்
இந்த நிலையில் ‘பகாசூரன்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் மோகன் ஜி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகாபாரம் புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரில் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈசன் அருள் 🙏🙏..
— Mohan G Kshatriyan (@mohandreamer) May 29, 2022
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...#Bakasuran#பகாசூரன் Title look.. Shooting in progress now.. In Theaters 2022.. @selvaraghavan@natty_nataraj@SamCSmusic@ProBhuvan@Gmfilmcorporat1pic.twitter.com/gKjYxXniEm
×

X