என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Event"

    • மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீனாட்சி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விங் கமாண்டர் ஜெயகுமார் துணை தலைவர், விமான படை வீரர்கள் சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மேஜர். சரவணன், துணை இயக்குநர் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், ஜி.பி. கேப்டன் கென்னடி அலுவலக பொறுப்பாளர் இ.சி.எச்.எஸ்.

    தஞ்சாவூர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.
    • வருகிற 12-ந் தேதி வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 2-ந் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது.

    3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் , ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    இதில் சதய விழா நாளான 3-ந் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.
    • குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோ பாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேக தீட்சை நடைபெற்றது.

    சென்ட் அலங்கார குடும்பம், ஸ்ரீ ராஜா வள்ளல், செண்பகவள்ளல் குடும்பம், ராஜகோபால் வள்ளல் ஆகிய குடும்பத்தாரின் 6 பேருக்கு ஆச்சார்யா அபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தினர்.

    ஸ்ரீராமன்தீட்சிதர், பிரசன்னா தீட்சிதர், செல்லப்பா தீட்சிதர், பத்ரி தீட்சிதர், கல்யாணம் தீட்சிதர், ரவி தீட்சிதர், ஜெகன் தீட்சிதர், ரகு தீட்சிதர், ஸ்ரீ வித்யாசாகர் தீட்சிதர், முதலிய தீட்சிதர்களும் இதற்காக வெளியூரில் இருந்து ஆசீர்வாதம் வழங்க வந்திருந்த குடந்தை, நாங்கூர் அண்ணன் கோவில், திருவிளத்தூர் முதலிய தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்

    அனைவருக்கும் கோயில் பிரசாதம் மாலை மரியாதைகள் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மற்றும் உள்துறை சிப்பந்திகள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    முன்னதாக தம்பி தீட்சிதர் வரவேற்றார்.

    • செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கூன வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்பு–ணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத ஆப்களை பயன்படுத்துவது, செல்போ–னுக்கு அடிமை ஆவதை தவிர்க்க வேண்டும் என பேசினர். மனநல ஆலோசகர் ரமேஷ் மாணவ- மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் விஜி மற்றும் மாணவ- மாண–விகள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி வரவேற்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவிசங்கர், சத்தியக்குமாரி, ஷபிராபானு, வட்டார கல்வி அலுவலர் வித்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தாகுமாரி சரவணன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி குறித்த வாசகங்களை சிறப்பு பயிற்றுநர் வெங்கடேசன் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து, ஆசிரியர்கள் மீனா, ரவிசங்கர் குழுவினரின் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வி.சி.பாண்டியன், கமல்ராஜா, கோபிநாத், குணாளன், கோ.முருகேசன், தில்லையம்பலம், ரமணி, சுந்தரராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ராஜிவ்காந்தி, மனோகரி, சிறப்பு பயிற்றுநர்கள் உலகநாதன், காளியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியை, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இலியாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர்கள் அசோக்ராஜ், சாகிதாபானு, சிறப்பு பயிற்றுநர்கள் தேன்மொழி, ஆனந்தி ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது.

       பல்லடம் :

    பல்லடத்தில் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை புரிந்த மருத்துவம், காவல்,தீயணைப்பு, பத்திரிக்கை துறையினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன்,ரெயின்போ ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தங்கலட்சுமி நடராஜன், கவிதா சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்ப டுத்துவது, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    குமாரபாளையம்:

    தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு குமாரபாளையத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி குமாரபாளை யம் பாரதி நகரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியா ளர்கள் இணைந்து வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல் பற்றியும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பை பயன்ப டுத்துவது, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யபட்டது.

    இதில் கவுன்சிலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஜுல்பிகர் அலி, ஐயப்பன், கதிரேசன், விக்னேஷ், கந்தசாமி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் (திங் கட்கிழமை ) காலை 7 மணி அளவில் நடக்கிறது.
    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந் து கொண்டு சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    புதுச்சேரி:

    சர்வதேச கர்லாகட்டைதினத்தையொட்டி 100 பேர் ஒரே இடத்தில் கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் (திங் கட்கிழமை ) காலை 7 மணி அளவில் நடக்கிறது. பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனரும் சத்திரிய சேனா சேவக நிறுவனருமான ஜோதி செந்தில் கண்ணன் தலைமை தாங்குகிறார்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந் து கொண்டு சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதில் முதல்-அமைச்சர் ரங்க சாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    முன்னதாக சத்திரிய சேனா சேவக பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் அனைவரையும் வரவேற்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் புதுவை, சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், பீகாரை சேர்ந்த 10 பேர் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேர் தனித்தனியாக கர்லா கட்டை சுற்றும் சாதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை தஞ்சை திலகர் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு அன்று மாலை 6 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை தஞ்சை திலகர் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இது குறித்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை திலகர் திடலில் நாளை மறுநாள் (18-ந்தேதி) மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 6.15 மணிக்கு திருமுறை விண்ணப்பம், 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

    தொடர்ந்து 7 மணிக்கு கயிலை வாத்தியம், 7.30 மணிக்கு லட்சுமணனின் தெருக்கூத்து, 8.15 மணிக்கு காமாட்சி பத்மநாபன் குழுவினரின் நாத இசை சங்கமம், 9 மணிக்கு சீர்காழி சிவசிதம்பர குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு ராமலிங்கம் குழுவினரின் பட்டிமன்றமும், 11:30 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும், 12 மணிக்கு கலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியமும்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு திவ்யசேனாவின் குச்சிப்புடி நடனமும், அதிகாலை 1 மணிக்கு தேன் மொழி ராஜேந்திரனின் காவடியாட்டம், 1.30 மணிக்கு கரகாட்டம், 2 மணிக்கு நையாண்டி மேளம், 2.30 மணிக்கு சிவன் சக்தி ஆட்டம் நடைபெறுகிறது.

    3 மணி முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்து சிற்பி, ஸ்ரீகாந்த், ஹரிகரன் மாளவிகாசுந்தர்,சோனியா குழுவினரின் இசை சங்கமம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் உதவி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி குருகுலம் பள்ளி நிறுவனர் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் 126-வது பிறந்தநாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் சென்ட் உறுப்பினர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது.

    விழாவில் சர்தார் தேசிய சேவைகள் மற்றும் கல்வி பணிகள் குறித்து கைலவனம் பேட்டை ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    விழாவை யொட்டி வேதா ரண்யம் சரகத்தில் உள்ள 17 பள்ளிகளின் மாணவ- மாணவிகளிடையே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர வடிவேல், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் அம்பிகாதாஸ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சித்திரவேல், வைரக்கண்ணு உள்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் வித்யாலயம் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.

    • நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

    • பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக
    • இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீத்தொண்டு நாளை அனுசரிக்கும் விதமாக, பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீத்தொண்டுநாள் வாரவிழாவை முன்னிட்டு காலை, மாலை 2 நேரமும் பொதுமக்கள் கூடுமிடங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு பிரசாரங்கள், செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தும், தீ அபாயம் உள்ள இடங்களில் தீ தடுப்பு ஒத்திகையும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. 

    ×