search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "041 பள்ளிகள் திறப்பு-உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்"

    • கரூர் மாவட்டத்தில் 1,041 பள்ளிகள் திறப்பு-உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
    • புதிதாக மழலையர், 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட சில குழந்தைகள் வகுப்பில் அழுதுக்கொண்டே இருந்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 84 தனியார் மழலையர், தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, அரசு, ஆதிதிராவிட நல, அரசு உதவிபெறும், தனியார் என 579 தொடக்க, 183 நடுநிலை, 91 உயர்நிலை, 122 மேல்நிலை என மொத்தம் 1,041 பள்ளிகள் உள்ளன.

    கோடை விடுமுறைக்கு பிறகு 2022 2023ம் கல்வியாண்டுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் புதிய சீருடை அணிந்து உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்தனர். நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.

    புதிதாக மழலையர், 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட சில குழந்தைகள் வகுப்பில் அழுதுக்கொண்டே இருந்தனர். குழந்தைகள் பள்ளிக்கு புதிது என்பதால் பெற்றோர் சிலரும் பள்ளி அருகே காத்திருந்து அழும் குழந்தைகளை ஆறுதல் கூறி வந்தனர்.

    மிகவும் அழுத குழந்தைகளை ஆசிரியர்களே அழைத்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

    ×