என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-operative"

    • விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
    • விவசாயிகள் பாதிக்கும் வகையில் வியாபாரிகள் கடை அமைக்க அனுமதிக்க கூடாது .

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வியாபாரத்தை கெடுக்கும் வகையில் வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து விதிகளை பின்பற்றாமல் காலை நேரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களின் வருகை குறைவதால் விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.

    இந்நிலையில் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் காலை 4 மணி முதல் 9 மணி வரை வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏபிடி. எம் .மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனரை நேரில் சந்தித்து உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் தங்களது வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடை அமைக்க வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் இங்கு கடை அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் மனு வழங்கப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே கூட்டுறவு விவசாய பண்ணை சங்கம் சார்பில் சிமெண்டு களம்-குடோன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கூட்டுறவு விவசாய குத்தகைதாரர் பண்ணை சங்கம் சார்பில் சிமெண்ட் களம் மற்றும் குடோன் திறப்பு விழா நடந்தது.

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு நெல் களஞ்சியம் என்ற பெயரில் சிமெண்டு களத்தை தனுஷ் குமார் எம்.பி. தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கல்வெட்டை ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் திறந்து வைத்தார்.

    கூட்டுறவு விவசாய பண்ணை சங்க தலைவர் மிசாநடராஜன் வரவேற்றார். பெரியகுளம் கண்மாய் தலைவர் கலைச்செல்வன், வாண்டையார்குளம் கண்மாய் தலைவர் கண்ணன் உள்பட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தேவதானத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள் முதல் நிலையத்தை இந்த சிமெண்டு களத்திற்கு மாற்றுவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டுறவு சங்க துணை தலைவர் காசி நன்றி கூறினார்.

    இயற்கை ஆர்வலர் தலைமலை, சேகர், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசானக் காளை, கிருஷ்ணாபுரம் கவுன்சிலர் காமராஜ், நக்கனேரி கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு பயன்படும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட வேண்டும் என இணை செயலாளர் கூறினார்.
    • கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இணைச்செயலர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கஜ்குமார் பன்சால் பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் 10-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பொதுவாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் நியாய விலை கடை நடத்துதல், பெட்ரோல் பங்கு நடத்துதல், உரம் விற்பனை செய்தல், இ-சேவை மையம் செயல்படுத்துதல், கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் வழங்குதல், விவசாயிகளுக்கான கடன் திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த கூட்டுறவு சங்க வங்கிகளின் வளர்ச்சிக்கு பயனளித்து வருகின்றன.

    மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும் முழுமை யான வளர்ச்சி பெறுகின்ற வகையில் திட்டமிடுதல் வேண்டும். பொதுவாக நியாய விலைக்கடைகளில் 5 நாட்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யலாம்.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெரிய அளவில் வணிக நிறுவன கட்டி டங்கள் கட்டி மக்க ளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தேவை யான வேளாண் கருவிகளை வாடகைக்கு விடலாம்.

    அதே போல் விவசாயி களுக்கு தானிய பொருட்கள் வைப்பதற்கான கிடங்குகள் கட்டி மாதந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 வகையான பணிகளை செயல்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு இந்த வருவாயை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களின் தேவையை உள்ளூரில் இருந்து நிறைவேற்றும்போது வாடிக்கையாளர்கள் மன நிறைவு பெற்று ஒவ்வொரு சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு தேவையான வழிகாட்டு தலை செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார், பொது மேலாளர் கருணாகரன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா மற்றும் உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.

    மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயிகள் சங்கத்தினரிடம் பதிவாளர் உறுதி
    • வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து தேர்தல் நடத்தும் நிலையில் ஒரு நாள் முன்பு திடீரென தேர்தலை நிறுத்தியது ஜனநாய கத்திற்கு எதிரானதாகும்.

    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தலைமையில் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்தன், பாண்டுரங்கன், வீரப்பன், குப்புசாமி, வீராசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டுறவு பதிவாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் உள்ள பெரும்பாலான சங்கங்களில் தேர்தல் நடத்தப்படாமல் அதிகாரி களே நிர்வகித்து வருகின்றனர். சில பால் உற்பத்தியாளர் சங்கங்க ளில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் கால அட்டவணை தயாரிப்பு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது திடீரென தேர்தலை நிர்வாகம் நிறுத்தி விடுகிறது.

    விநாயகம்பட்டு , சோரப்பட்டு பால் சங்கத்திற்கு தேர்தல் தேதி அறிவித்த பின் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து தேர்தல் நடத்தும் நிலையில் ஒரு நாள் முன்பு திடீரென தேர்தலை நிறுத்தியது ஜனநாய கத்திற்கு எதிரானதாகும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட பதிவாளர் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டு தேர்தல் நடத்த உள்ளதாக உறுதியளித்தாக விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடக்கம்
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பிஆர் 10 மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன், மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான அரசு , பெரம்பலூர் சரக துணை பதிவாளர் அ. இளஞ்செல்வி பெரம்பலூர் நகர மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஒன்றிய குழு தலைவர் வேப்பந்தட்டை க. ராமலிங்கம் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கடன் மேலாவிற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கம் தலைவர் கருணாநிதி செய்து இருந்தார்.

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.
    • மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    அரியலூர்

    கூட்டுறவு சங்கங்களின் அரியலூர்மண்டல இணை பதிவாளர்தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூ ர்மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் துணைபயிற்சி நிலையம் 2023-2024-ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி பகுதிநேர மாற்றத்திற்குட்பட்ட கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள், கட்டணம், ரூ.100 இணையவழியில் செலுத்தி இந்த மாதம் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அரியலூர்மாவட்டத்தை சார்ந்த

    விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
     
    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. 
     
    இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. 
    அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 

    இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×