என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training"

    • இலவசப் பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
    • பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தோ்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட உள்ள துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், துணை பதிவாளா் (கூட்டுறவுத் துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் போன்ற பணியிடங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோ்வு அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

    திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. அதேபோல, குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்த பயிற்சி வகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்.
    • வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டனர்,

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கல்லூரியின் வணிகவியல் துறை, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் லட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் அஜய் மற்றும் கல்வி ஆலோசகர் ராமச்சந்திரன் ஆகியோர் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

    • தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.
    • 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா , ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , பிரதமமந்திரி கௌசல் விகாஸ் யோஜனா , மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், 4 சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி பயிற்சிகள், சில்லரை விற்பனை வணிகம், பி.பி.ஓ., துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு , சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் நடத்துகிறது.

    இப்பயிற்சிக்கு இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்யும் பொருட்டு இளைஞர் திறன் திருவிழா வருகிற 25-ந்தேதி (வெள்ளிகிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, முகாமில் பள்ளிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் கலந்து கொண்டு பயிற்சியினை தேர்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • புதிய தொழில்நுட்ப பயன்பாடு பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை.
    • இணைச்செயலாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அமிர்த விஷ்வா வித்யாபீடம் இணைந்து விர்ச்சுவல் லேப் என்ற புதிய தொழில்நுட்ப பயன்பாட்டினை பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்வை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார். அமிர்த விஷ்வா வித்யா பீடத்தை சார்ந்த அதன் வெர்ச்சுவல் லேப் ஒருங்கிணைப்பாளரான சனீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி செயலர் செந்தி ல்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆலோசகர் பரமேஸ்வரன், நிர்வாக தலைவர் முனைவர் மணி கண்ட குமரன், கல்விசார் இயக்குனர்முனைவர் மோகன், முதல்வர்முனைவர் ராமபா லன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை மற்றும் பேராசிரியர் முனைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமோகன் வரவே ற்றார். பேராசிரியர் முனைவர் ராமானுஜம் நன்றி கூறினார்விழா ஏற்பாடு களை இயந்தி ரவியல் துறை ஒருங்கிணை ப்பாளர்கள் செய்தனர்.

    • குறுவள மைய ஏதுவாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ள குறுவளமையக் கூட்டத்தில் மாவட்ட ஏதுவாளர்களாக செயல்பட உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் நடந்தது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை நடத்தியது. பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் மகாலிங்கம் வரவேற்றார்.

    இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தின் கீழ் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 237 பேர் கலந்து கொண்டனர். உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மருதக்காளை, கணேசுவரி, மெர்சி ஆகியோர் பேசினர். இ்ல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியப் பயிற்றுநர்கள் முத்துராஜ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளராக இளங்கோ, இணை ஒருங்கிணைப்பாளர்களாக மகாலிங்கம், சரவணகுமாரி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி நடந்தது
    • புலியூரில் நடைபெற்றது

    கரூர்

    தாந்தோணி வட்டார வள மையத்திற்குட்பட்ட 9 குறுவள மையத்தில் உள்ள 260 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஸ்) வழங்கும் நிகழ்ச்சி புலியூரில் நடைபெற்றது. இதில் தாந்தோணி குறுவள மையத்தில் 31 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி பார்வையிட்டார். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வகுமார் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் சார்பில் போதை பொருள் அடிமையில் இருந்து மீளுவது, தொடர்பான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட மனநல மருத்துவர் அளித்தனர்.
    • முகாமில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் சார்பில் போதை பொருள் அடிமையில் இருந்து மீளுவது, மனச் சிதைவு பாதிப்பிலிருந்து மீளுவது போன்ற நோய்களுக்கு மனநல திட்டம் தொடர்பான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் அளித்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் சேரன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது.

    இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர்(திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா வழங்கினார். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு
    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • புதுவயைில் மத்திய அரசின் ஊரக வளாச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த நிறுவனம் சார்பில் இலவச ஏ.சி. மற்றும் பரிட்ஜ் பழுதுநீக்குதல் பயிற்சி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

    புதுச்சேரி:

    புதுவயைில் மத்திய அரசின் ஊரக வளாச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இலவச ஏ.சி. மற்றும் பரிட்ஜ் பழுதுநீக்குதல் பயிற்சி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. 30 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு 10-ம் வகுப்பு வரை பயின்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி திட்ட பாடங்கள் ஸ்கில் இந்தியா பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டது ஆகும்.

    புதுவை யில் கடந்த 12 வருடங்களாக 8,552 இளை ஞர்களுக்கு சுய தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய அரசு ஏ.ஏ. சான்றிதழ் அளித்து பாரட்டியுள்ளது.

    இதில் சுய தொழில் பயிற்சியுடன் கடன் பெறவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

    • சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயலர் லூர்து மணி பயிற்சியை தொடங்கி வைத்தார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தோட்டக்கலை விஞ்ஞானி வேல்முருகன், இயற்கை விவசாயம் பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரி, பி.எம். கிசான் திட்டத்தைப் பற்றியும், அதை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்தும் பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித்குமார் தோட்டக்கலை மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இதில் சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விவசாய நலச் சங்க உறுப்பினர்கள் ராஜ மனோகரன், செல்வஜெகன், ஜஸ்டின், வெலிங்டன், ஜூலியன், ராஜ், பிலவேந்திரன், அலெக்ஸ், பேச்சி, மெர்சி, லிவிங்ஸ்டன். சவரிராயன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகன், ஜேக்கப் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் பொருட்டு 61 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கவுரி, பயிற்சி நோக்கங்கள் பற்றி தன்னார் வலர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினார். 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் பொருட்டு 61 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில் அடிப்படை எண்ண றிவு, முதலுதவி அடிப்படை சட்டங்கள், உடல்நலம், பேரிடர் மேலாண்மை, சாலை பாதுகாப்பு, உதவித்தொகை திட்டங்கள், இணையவழி சேவை, பணமில்லா பரிமாற்றம், ஏ.டி.எம் பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரிய பயிற்றுநர்கள் செல்வராணி, பார்வதி மற்றும் ஆசிரியர் வளர்மதி ஆகியோர் இப்பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

    • இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
    • விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்க ளிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்ப டுத்தும் வகையில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடை பெற்றது.

    அப்போது இந்திய அரசும், மாநிலஅரசும் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

    திறன் பயிற்சி திட்டங்க ளில், இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ப, விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் விழிப்பணர்வு ஏற்படுத்துவதே இளைஞர் திருவிழாவின் நோக்கம் என இதில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்து பேசினர்.

    இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முன்னதாக உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கனியமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், மாவட்ட கவுன்சிலர்கள் அமுதா மனோகரன், தமயந்தி, பேருராட்சி அலுவலர் கார்த்தி. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கமல்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.

    பின்னர் இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் ஏராளமான இளம்பெண்கள் உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர்.

    ×