என் மலர்
நீங்கள் தேடியது "Birthday"
- தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது.
- தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சென்னை கொட்டிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோடானு கோடி உடன்புறப்புகளால்தான், மக்களால்தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் அமர்ந்த இடத்தில் என்னையும் அமர வைத்தது உடன்பிறப்புகள்தான்.
ஓயாமல் உழைக்கும்போது, பிறந்தநாள் விழாக்கள் சிறிது ஓய்வுக்கான ஸ்பீட் பிரேக்கர்கள் போன்றவை. கோபாலபுரம் பிறந்த இடமாக இருந்தாலும் என்னை வளர்த்தது தமிழ்நாடு.
தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது. தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கான மேடை மட்டுமல்ல, வெற்றி விழா மேடை. 2026 தேர்தல் வெற்றிக்கான தொடக்க விழா மேடை இது.
விரிசல் விழாதா என எண்ணிக் காத்திருப்பவர்கள் ஆசையில் மண் தான் விழும். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுபாடு வரும் ஆனால் விரிசல் வராது.
2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் தரை மட்டமாகி இருக்கும்.
தமிழ்நாட்டிற்கான எந்த நன்மையையும் மத்திய பாஜக அரசு செய்வதில்லை. தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு பார்த்து பார்த்து வஞ்சிக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை திணிப்பதை ஏற்க மறுப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு. பெயர்தான் தர்மேந்திர பிரதான், ஆனால் அவரிடம் தர்மமே இல்லையே.
தேவைப்பட்டால் நாங்கள் பல மொழியை கற்றுக் கொள்வோம் எங்கள் மீது இந்தியை திணிக்க வேண்டாம். இந்தி திணிப்பால் மைத்ரி, மகதி உள்ளிட்ட மொழிகள் அழிக்கப்பட்டது.
எங்களை எப்படி மிரட்டினாலும் இந்தியை திணிக்க முடியாது. மிரட்டினால் கூழைக் கும்பிடு போன நாங்கள் என்ன அடிமை அதிமுகவா ?
தமிழ்நாட்டின் தொகுதிகளை, பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. பிரச்சனை எழுப்பியவுடன் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையாது என்கிறார்கள்.
மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்வது மகிழ்ச்சி. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், காங்கிரஸ் கொறடாவும், தெலுங்கானா மாநில பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் பிறந்த நாள் விழா சிவகிரி தேரடி முனீஸ்வரர் கோவில் அருகே நடைபெற்றது.
விழாவிற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தங்கப்பாண்டியன், தொகுதி காங்கிரஸ் பட்டதாரி அணி தலைவர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தேரடி முனீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவரும், வழக்கறிஞருமான சங்கை. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்க்குடி அமர் சேவா சங்கம் கிளையான சிவகிரி ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு வெற்றியூர் கதிரவன், சிவகிரி நகர காங்கிரஸ் நிர்வாகிகள், துணைத்தலைவர்கள் நாட்டாமை மாணிக்கம், சதானந்தன், மணி, செயலாளர்கள் மாடசாமி, டெய்லர் ஆறுமுகம், நிர்வாகக்குழு தர்மராஜ், சந்திரன், பிச்சை, இளைஞர் காங்கிரஸ் மனோ பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகிரி நகர காங்கிரஸ் ஓ.பி.சி.தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.