என் மலர்
நீங்கள் தேடியது "பூமிபூஜை"
- ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
- மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ. 90 -லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
- நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எமகல்நத்தம், மல்லபாடி, கூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி கட்டிடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ. 90 -லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர்கள் தம்பிதுரை, சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், மகேந்திரன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது
- வாராப்பூர் ஊராட்சி பள்ளியில் நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே விரிசலுற்று சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி, வகுப்பறைகள் சமுதாயக்கூடத்திலும், நாடகமேடை வளாகத்திலும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பள்ளியின் நிலையை பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனருமான மருத்துவர் சேதுராமன் கவனத்திற்கு ஊராட்சிமன்றத்தலைவர் மலர்விழி நாகராஜன் கொண்டு சென்றார். இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டடம் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜையில் மருத்துவர் சேதுராமன், காமினி குருசங்கர், ஊராட்சி மன்றத்தலைவர் மலர்விழி, மீனாட்சி மிஷன் பொறியாளர் கோபால், பொறியாளர் விஎன்ஆர்.நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
- கழிவு நீர் உறிஞ்சி தளம், ரூ. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
- இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த பாலேப்பள்ளி ஊராட்சி சூரன்குட்டை கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனியில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில், கழிவு நீர் உறிஞ்சி தளம், ரூ. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேகர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெசிந்தா வில்லியம், துணை தலைவர் மாரம்மாள் சின்னசாமி, ஊர் கவுண்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயகூட கட்டுமான பணிகளை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது.
மேலூர்
மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வஞ்சிநகரம் ஊராட்சி கல்லங்காடு சிவன் கோவிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மாவட்ட வேளாண் விற்பனை குழுதலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணைத்தலைவர் குலோத்துங்கன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலவளவு விஜயராகவன், கிடாரிபட்டி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி.முன்னிலை வகித்தார்.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சொந்த செலவில் நூலக வசதி ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறேன். அதேபோல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் ஆண்டு விழா நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆண்டுவிழா போட்டி களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழிநடத்திச்செல்வேன்.
கல்விக்கு பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதுபோல அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்றார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கற்பகம்மாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், தங்கப்பான், சீதாராமன், வைரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
- 3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம் தாழஞ்சேரி ஊராட்சி, வரகடை கிராமத்தில் தொடங்கி நாராயணமங்கலம், திருவாளபுத்தூர் வழியாக கடக்கம் வரை சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர்.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022) -இன் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட குழு உறுப்பினரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும்மான இளையபெருமாள், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபான்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
- ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்து பணிமனை அருகே யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகம் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டு பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. அடிக்கடி கட்டிட கூரைகள் இடிந்து விழுந்தன. பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.3.67 கோடி செலவில் 2 மாடிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.
பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சேவுகப் பெருமாள் முன்னிலை வகித்தனர். பொறியாளர்கள் அர்ஜுனன், கணபதி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது.
- சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் இருந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சரண்யா செந்தில்நாதனிடம் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். தற்போது காந்தி நகர் முதல் மற்றும் 2-வது வீதிகளில் சாக்கோட்டை யூனியன் தலைவர் நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமைதாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர்கள் செல்வி, செந்தில், கிளை செயலாளர்கள் ராமு, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.
- மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை.
சீர்காழி:
சீர்காழி அருகே புது குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பருவநிலை மாறுபாடு மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை சார்பில் கடற்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் மற்றும் மீன் உலர் தளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கல் கொட்டும் பணி, வலை பின்னும் கூடம், அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார்.
நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதில் காவிரி பூம்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், நிர்வாகிகள் ஜி.என்.ரவி, பழனிவேல், மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரபீந்திரநாத், உதவி பொறியாளர் சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- 2-வது வார்டு உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டை லைன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான நடைபாதை இல்லாததால் மழைக்காலங்களில் குழந்தைகள், முதியோர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் கேத்தி பேரூராட்சி தலைவர் முன்னிலையில் அப்பகுதியில் நடை பாதை அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பூமி பூஜை கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
- ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்திற்கான பூமிபூஜை நடந்தது.
- அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத் தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் இந்தப்பகுதி மக்கள் சமுதாயக் கூடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்த னர்.அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அதன்படி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாத புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது.
இதில் கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அஹமது, மாணவர் அணி நகர் அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகராட்சி பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்ப சிவம், நகர் மன்ற கவுன் சிலர்கள் முகமது ஹாஜா சுகைபு, நசுருதீன், மீரான் அலி, பயாஸ், காயத்ரி உள்பட கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள், வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.