என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம்"

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஓசூர்,

    ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அவர் பேசுகையில் மின் வெட்டு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும், மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பழுது அடைந்திருந்தால் உடனே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    மழைக்காலங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மின் கம்பிகள் சாலையில் கிடந்திருந்தால் உடனே மின் வாரியத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் எச்சரிக்கையாக செல்லவேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். அவற்றைத் தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது.

    குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட செயற் பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) ஜெயபிரகாஷ் மற்றும் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட ஓசூர் கோட்டத்தை சேர்ந்த மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    கரூர்

    கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் வட்டக்கிளை சார்பில் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிமியோன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சம்பத்குமார் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் செல்வராணி தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் மத்திய அரசு கடந்த 1.7.2022 முதல் அறிவித்து நிலுவைத் தொகையுடன் வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வினையும், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு ஊதியம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தினை ரத்து செய்து காலம் முறை ஊதியத்தினை வழங்கிட வேண்டும், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன."

    • "மெட்டல் டிடெக்டர்" சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதி
    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் பக்தர்களின் தரிச னத்துக்காக தினமும் அதிகாலை 4.30மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்து கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 1 மணிக்கும், இரவு 9 மணிக்கும் நடை அடைக்கப்படுகிறது.

    நேற்று முதலே பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.இதனால் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்"சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் திருப்பதி வெங்கடேஸ்வரபெருமாள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக படகு துறையில் அய்யப்ப பக்தர் களின் கூட்டம் அலைமோதுகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் வணிகர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வணிகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினர்.
    • புதிதாக இணைய இருக்கும் 8 கிளை சங்கங்களுக்கும் 10 கண்காணிப்பு கேமரா புதிதாக பொருத்துதல் என வணிகர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பொருத்தப்பட வேண்டும்.

    சுவாமிமலை:

    பந்தநல்லூரில் டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர் முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவத் தலைவர் அசோகன் மற்றும் பொறுப்பாளர்கள், முன்னிலையில் மேலும் கிளை சங்கமான பந்தநல்லூர் அனைத்து வணிகர் நல சங்கம் தலைவர் ரகுராமன், மற்றும் பொறுப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதில் வணிகர்களின் குறை கேட்டு அறிய திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகபர் சாதிக், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் வணிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்தவும் வணிகர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வணிகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினர்.

    டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் கிளை சங்கமான திருப்பனந்தாளில் மேலும் 10 கேமராக்கள் அதிகப்படுத்துதல், பந்தநல்லூரில் மேலும் 10 கேமராக்கள் அதிகப்படுத்துதல், மேலும் புதிதாக இணைய இருக்கும் 8 கிளை சங்கங்களுக்கும் 10 கண்காணிப்பு கேமரா புதிதாக பொருத்துதல் என வணிகர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக பொருத்தப்பட வேண்டும் என டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது
    • அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தர தீர்மானம்

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டரங்கில் 21 வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சாவித்திரி பல்வேறு தீர்மானங்களை வாசித்து பேசினார். மேலும் அனைத்து வாடுகளிலும் உள்ள கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை முக்கிய பணிகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆணையர் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 134 நபருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
    • சுற்றறிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.

    அரியலூர் :

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், உறுப்பின ர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் சாலை , குடிநீர் , கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

    மேலும் இக்கூட்டத்தில், ஊராட்சிகளில் எந்தவொரு நிதியிலிருந்தும் உயர்கோபுரம் மின் விளக்குகள், சிறுமின்கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்படுகிறது என்றும், சோலார், எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்தல் உடனடியாக தடைசெய்யப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம், இயக்குநர் பிரவீன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது.

    • சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
    • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை மற்றும் இருக்கூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான கல்குவாரி சுரங்கத்தின் அங்கீகாரம் காலவதியானதை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலமாக ஒப்பந்தம் மேற்கொண்டு சுரங்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

    அதன்படி, மாநில சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் குறிப்பு விதிமுறை கடிதம் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மல்டிகலர் கிரானைட் குவாரி சுரங்கத்தின் பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பரமத்தியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.

    இதில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கலையரசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சித்ரா, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    • திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் லதாஜெகன் தலைமையிலும், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் முன்னிலை யிலும் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சங்கர் கைலாசம் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கவுன்சில் கூட்டத்தில்; வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்வது, செக்காணூரணி பகுதியில் கொசுத் தொல்லையை கட்டு ப்படுத்துவது, கிராமப்புற ரேசன் கடைகளில் பிரச்சினையாக கைரேகை வைப்பதில் உள்ள குறை பாடுகளை நீக்குதல், மத்திய அரசு வழங்கிடும் அரிசியை முறையாக முறையாக வழங்குதல், மத்திய அரசின் 100நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளர் களை இடமாற்றம் செய்வது, செக்காணூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன் சிலர்கள் ஆண்டிச்சாமி, ஓம்ஸ்ரீ முருகன், சிவபாண்டி, மின்னல் கொடி ஆண்டிச் சாமி, பரமன், சிவபிரியா ஆகியோர் கருத்து தெரிவித்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது

    • திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கை.
    • குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீல் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டக்னர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கைகள், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது குறித்த ஆலோசனை மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.அவற்றை விரைந்து தீர்வு காணக்கோரியும், நிலுவையில் உள்ள பிடியாணையை நிறைவேற்றவும் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.

    • அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
    • அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தகூட்டத்தில் விசிக , தி.மு.க., சிபிஐ, சிபிஎம், மஜக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வணிகர் பேரவை,வழக்கறிஞர் சங்கம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் போன்ற 22 ற்கும் மேற்பட்ட அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

    ஆலோசனையை தொடர்ந்து அறந்தாங்கியில் அம்பேத்கர் திருவுருவ சிலை வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, அரசு விதித்த நிபந்தனைகளை, சிலை அமைப்புக்குழுவினரால் ஏற்கப்பட்டு அனைத்து ஆவணங்கள் விதிமுறைகள் சரி செய்து கொடுக்கப்பட்டும் இதுவரை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்யவில்லை,

    எனவே கலெக்டர் பரிந்துரை வழங்க வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் மாதம் 2-ம் தேதி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பதெனவும், அதிலும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யவில்லையெனில் 2023ம் ஆண்டில் அனைத்துக் கட்சி மாநில தலைவர்களை அழைத்து சுமார் 10 ஆயிரம் பொதுமக்களை திரட்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.
    • மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க பொதுகுழு உறுப்பி னர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் இல.சு.மணி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஆடுதுறை நசீர் முகமது, ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம், மாநிலங்க ளவை உறுப்பினர் மு. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி. இரா. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வன், மாநில அயலக அணி துணை செயலாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் துரைமுருகன், ஜெயலட்சுமி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் இராமபிரபு, சிவ.மணிமாறன், பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை.மணிமாறன், சரபோஜி ராஜபுரம் கிளை செயலாளர் பழ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா ர்கள்.

    கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 15 வது தி.மு.க பொது தேர்தலில் மீண்டும் கழக தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினையும் அவர்களையும், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பொது குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் சு.கல்யாணசுந்தரம் அவர்களையும், மாவட்ட கழக நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்த தி.மு.க தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்க ளை தெரிவித்து கொள்வதெனவும், புதிய உறுப்பினர்களை கிளைகள் தோறும் அதிக அளவில் சேர்ப்பது என்றும்.

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி முகவர்க ளையும், வாக்குச்சாவடிக்கு 10 உறுப்பினர்கள் கொண்ட நிலை குழு உறுப்பினராக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பது எனவும், கிளை கழகம் தோறும் அனைத்து கிளைகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது எனவும், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் நன்றி கூறினார்.

    • தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
    • மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.

    எனவே தஞ்சை மாநகர கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டி பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப ல்கலைக்கழகவளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×