என் மலர்
நீங்கள் தேடியது "ration shop"
- பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது.
- ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்பவர்கள் பயோமெட்ரிக் முறைப்படி தங்கள் கை விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ரேசன் அட்டையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் ரேகை வைக்க வேண்டும்.
ஏற்கனவே கைரேகைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருப்பதால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்களின் ரேகை அதனுடன் ஒத்திருந்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.
ஆதாரில் இடம்பெற்றுள்ள ரேகைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலர் புதுப்பிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.
ரேசன் கடை ஊழியர்கள் கைரேகை பொருந்தாதவர்களிடம் நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் உங்கள் கைரேகையை அப்டேட் செய்யவில்லை. எனவே பொருட்கள் வாங்க முடியாது என்கிறார்கள்.
ஆனால் விபரம் புரியாத சாதாரண மக்கள் 'சார். என்னிடம் ஆதார்கார்டும் இருக்கிறது. அதில் என் கைரேகை தான் இருக்கிறது' என்று சொல்கிறார்கள்.
அதற்கு ரேசன் ஊழியர்களும் நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை கேட்டதும் எதுவும் புரியாமல் சினிமாவில் வடிவேலு 'அப்ரண்டி ஷிப்' என்பதை 'அப்ரசண்டிகள்' என்பதை போல் ஏதோ அப்ரடிக்காம்... ஒண்ணும் புரியலை என்றபடி பரிதாபமாக திரும்பி செல்கிறார்கள்.
விருகம்பாக்கம் மின் மயானம் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருள் வாங்க சென்றவர் அவரது ரேகை ஒத்துப்போகவில்லை என்றதும் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்து சென்றுள்ளார். அவரது ரேகையும் ஒத்துப்போகாததால் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றார்கள். தினசரி வேலைக்கு செல்லும் அவர்கள் கூறியதாவது:-
ஆதார் கார்டில் கைரேகையை அப்டேட் செய்ய கோயம்பேட்டில் இருக்கும் ஆதார் தலைமை அலுவலகம் அல்லது போஸ்ட் ஆபீஸ்களுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.
கோயம்பேட்டுக்கு சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும். காத்திருந்தாலும் முடியாமல் செல்பவர்களும் உண்டு. வேலைக்கு லீவு போட முடியாது என்பதால் தனியார் நெட்சென்டர்களுக்கு சென்று முன்கூட்டி நேரம் முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கு ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவரது ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய ரூ.1000 செலவாகும்.
எங்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி தான் நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மாதத்திற்குரிய பொருட்கள் எதையும் வாங்க முடியவில்லை.
பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் ரேசன் கடைகளில் கிடைக்கிறது. இதற்காக அரசு தரும் மானிய தொகையை ஆதார் கார்டு அப்டேட் செய்ய செலவழிக்க வேண்டி இருப்பதாக அவர்கள் ஆதங்கப்பட்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
- கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
சிவகங்கை
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
- தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
- விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
திண்டுக்கல் :
திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-
கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலேயே 2-வது இடமாக கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய இருக்கிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பித்து உள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.
இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
- பொது விநியோக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
- ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மாநிலங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ரேசன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் திட்டங்களை மாநிலங்கள் முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய மாநிலங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை மாநிலங்கள் ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 91 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.
- ரேசன் பூட்டைஉடைத்து ஜீனி மற்றும் துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன்கடையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை தேடி வருகினறனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் நேருநகர் பகுதியில் ரேசன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டியை சேர்ந்த அழகர்(43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் பொருட்களை சரிபார்த்துவிட்டு கடையை பூட்டிச்சென்றார்.
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடைக்கு வந்தபோது பூட்டைஉடைத்து பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. அப்பகுதியில் 3 மர்மநபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். அழகர் சத்தம்போட்டதால் அவர்கள் பொருட்களை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து பொருட்கள் சரிபார்த்தபோது 100 கிலோ ஜீனிமூடை 2-ம், 250 கிலோ துவரம்பருப்பு, பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன்கடையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை தேடி வருகினறனர்.
- அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
- தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரு–கிற 15-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை–யும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 22-ந் தேதியும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் சின்னகரை பகுதியில் பார்க் கல்லூரியில் (தன்னாட்சி) நடைபெற உள்ளது.
எனவே நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டு திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் (www.drbtiruppur.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட 2 நகல்கள், 2 பாஸ்–போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிப்பதுடன் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 0421-2971173 மற்றும் drbtiruppur2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி காங்கீரிட் தளம் சேதமடைந்த நிலையில் விரிசல்களுடன் காணப்படுகிறது.
- மழைநீர் உள்ளே சென்று ரேசன் பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் செல்லும் சாலையில் ஒரு ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, ஆயில், சீனி, மண்எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதி காங்கீரிட் தளம் சேதமடைந்த நிலையில் விரிசல்களுடன் காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீர் கசிவுகள் உள்ளே சென்று ரேசன் பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மேற்கூரை இடிந்து தங்கள் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பணிபுரிந்து வருவதாக கூறுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.
- பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையின் விற்பனையாளராக மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த தகவலை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் குருவப்ப நாயக்கனூர் ரேஷன் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை நிறுவி உள்ளார்.
இதன் மூலமாக வார்டு வாரியாக பொருட்கள் வழங்கும் தகவல், என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது. கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.
இதன் காரணமாக முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூலித்தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு, காலநேர விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சரவணனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வாட்ஸ்-அப் குருப்பை உருவாக்கி தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் பொதுமக்களுக்கும் ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரேசன் கடை செயல்பட்டு வந்தது இந்த ரேசன் கடையில் 2 ஆயிரத்து 120 ரேசன் அட்டைகள் உள்ளன.
இந்த ரேசன் கடையில் சித்தூர் கேட் முனாபாடிப்போ, லட்சுமணாபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி சென்று வந்தனர் அதிகமான ரேசன் அட்டைகள் உள்ளதால் ரேஷனில் பொருட்கள் போடும்போது இங்கு திருவிழா போல் இருந்தது அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
கள்ளூர் ரேசன் கடை பெரிதாக உள்ளதால் அதனை பிரித்து அந்தந்த பகுதியில் ரேசன் கடையில் அமைத்துதருமாறு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் லட்சுமணாபுரம் கிராமத்தில் தனியாக ரேசன் கடை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இதைத்தொடர்ந்து லட்சுமணாபுரத்தில் புதிதாக ரேசன் கடை அமைக்கப்பட்டது இந்த ரேசன் கடையில் 640 குடும்ப அட்டைகள் உள்ளன.
புதிய ரேசன் கடை திறப்பு விழாவிற்கு குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.சிவா தலைமை தாங்கினார்.குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ஜி. பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் வி.ரவி நன்றி கூறினார்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
- நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர தஞ்சை மாவட்ட த்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு திருநெல்வேலிக்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
- 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இது குறித்து கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம்,திருப்பூர்,ஊத்துக்குளி,அவிநாசி, மடத்துக்குளம், தாராபுரம்,உடுமலை, காங்கேயம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் என மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்தப்பணிகளுக்கு 8222 விற்பனையாளர்,1429 கட்டுனர்கள் என மொத்தம் 9651 பேர் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 28 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விண்ணப்பதாரரின் கல்வி உள்ளிட்ட சான்றுகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி 1400 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் இந்த நேர்காணல் 22.12.22 வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும்.
- தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்று நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-
மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து முதல்-அமைச்சர் ஆணைப்படி பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும். இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த செறிவூட்டப்பட்ட அரிசி. 100 கிலோ அரசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும்.
கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும்.
கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர். செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பதிவு செய்து 755 அரவை ஆலைகள் உள்ளது. நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.