என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனை"
- திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
கடலூர்:
திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ரகசிய தகவலின் பேரில் நேற்று ராமநத்தம் பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்த 4 பேரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அருகில் நேற்று மாலை 10 கிராம் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
- காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சா விற்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து விசாரித்த போலீசார், காரைக்கால் நேருநகரைச்சேர்ந்த அமர்நாத் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அமர்நாத்தை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் எடைகொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி:
திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா நடமட்டம் இருப்பதாகவும், இளைஞர்கள், மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ராம்ஜி நகர் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கள்ளிக்குடி மார்க்கெட் அருகாமையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துராமன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில், ராம்ஜி நகர் பிள்ளையார் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மோகன் (32) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்தும் 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் போலீசார் ராம்ஜி நகர் காட்டூர் தண்ணீர் தொட்டி அருகாமையில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்களை கைது செய்தனர்.
விசாரணையில் கைதானவர்கள் ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கவிதா (42), ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த நந்தினி (48)என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராம்ஜிநகர் போலீசார் பிராட்டியூர் முதல் ராம்ஜிநகர் வரை பகல், இரவு நேரங்களில் ரோந்து பணி சென்று இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுத்து பொதுமக்கள் அச்சமின்றி நடமாட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.
- களக்காடு தனியார் பள்ளி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
களக்காடு தனியார் பள்ளி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் சிவன் கோவில் தெருவை ேசர்ந்த கண்ணன் என்ற குண்டாஸ் கண்ணன் (வயது 34) பிளாஸ்டிக் பையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூதிஷ்டர்தாஸ்(வயது30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி ஊத்துக்குளி பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூதிஷ்டர்தாஸ்(வயது30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தாம்பரம்:
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்த்த பிரகாஷ், விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிந்தது. கல்லூரி மாணவர்களான இவர்களில் பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டப்படிப்பு (எல்.எல்.பி) படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது.
நண்பர்களாக இருக்கும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் பிரகாஷ், நசீர்பாஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது அங்கு 12 கிலோ கஞ்சா சிக்கியது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 387 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தபட்டமைன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதை ஸ்டாம்புகள், 37 மோட்டார் சைக்கிள்கள், 5 கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் 25 பேர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
- போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
- 3 பேரும் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஹேன்சன் பால்ராஜ் தலைமையான போலீசார் சோரீஸ்புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து சோதனையிட்டதில் பொட்ட லங்களில் 330 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் விற்பனை செய்வதற்காக அந்த கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அய்யனடைப்பு பிரசாந்த் (வயது 30), மாதவன் நகர் ஆகாஷ் (22),மட்டக்கடை ஹரிஹரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே ஆத்தூர் ஏரிக்கரைப்பகுதியில்பிரம்மதேசம் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்பு அவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் ஓமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தமுரளி என்பதும் இவர் இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
- ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது இவர் அதேபகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பதும் இவரிடமிருந்து ரூ. 25,000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- ௩ பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுநகர், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் அந்தந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது 3பேர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகர் முனுசாமி (வயது 26)கடலூர் முதுநகர் அருண்குமார் (வயது 24)ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் புதுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
- இருவரிடமும் தலா இரண்டு கிலோ என மொத்தம் 4 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் தனிகாசலம் மற்றும் போலீசார் புதுத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
அப்போது சுகந்தலா(வயது 48), அவரது மகன் சீனிவாசன் (20) ஆகிய இருவரும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தது தெரிய வந்தது.போலீசாரை கண்டவுடன் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
அப்பொழுது பெண் காவலர் முனியம்மாள் உதவியுடன் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் இருவரிடமும் தலா இரண்டு கிலோ என மொத்தம் 4 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.