என் மலர்
நீங்கள் தேடியது "Motorcycle Accident"
- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
- அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர்.
திருமங்கலம்
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்ற சுபாஷ்(வயது 14). இவருடைய நண்பர் அழகுபாண்டி(25). இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் அருகே உள்ள வில்லூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுைரக்கு புறப்பட்டனர்.
திருமங்கலம் செங்குளம் 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியாவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுபாஷ், அழகுபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். அங்கு பாலமுருகனின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலமுருகன் தாத்தா நாகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அஜீத்குமார் (வயது 23). இவரது நண்பர்கள் நவீன் (20) , அருள்மணி (20). 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு பூசாரிப்பட்டியிலிருந்து, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தனர்.
- இதில் பாலத்தில் இருந்து 3 பேரும், 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 23). இவரது நண்பர்கள் நவீன் (20) , அருள்மணி (20). 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு பூசாரிப்பட்டியிலிருந்து, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவி னர் வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தனர். அப்போது கந்தம்பட்டி பைபாஸ் கடந்து, பட்டர் பிளை மேம்பாலத்தில் ஏறினர்.
பாலத்தின் வளைவில் திரும்பும் போது, மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தில் இருந்து 3 பேரும், 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாய மடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் அண்ணன், தம்பி 2 பேரும் வீட்டிற்கு சென்றனர்.
- ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.
ஈரோடு:
ஈரோடு ஆர்.என்.புதூர் பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(44). இவரது தம்பி தேவராஜ்(41). இருவருக்கும் திருமணம் ஆகி அருகருகே வசித்து வருகின்றனர்.
பன்னீர்செல்வம், தேவராஜ் 2 பேரும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பேல் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.
2 பேரும் தினமும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து பணி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வீட்டிற்கு சென்றனர். பன்னீா்செல்வம் வண்டியை ஓட்டி செல்ல தேவராஜ் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
ஈரோடு-பவானி சாலை சுண்ணாம்பு ஓடை அருகே சென்றபோது முன்னால் சென்ற தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (40) என்பவரது மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.
இதில் நிலை தடுமாறி பன்னீர்செல்வம், தேவராஜ் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பன்னீர்செல்வத்துக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. தங்கவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கடேசனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.
- ஏழுமலை மகன் வெங்கடேசன் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 46). விவசாயியான இவர் நேற்று மாலை தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பையூர் பாலத்தை தாண்டி மின்சார டிரான்ஸ்பர் அருகில் சென்ற போது அதே சாலையில் வெங்கடேசனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதனை அதே ஊரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் ஓட்டி வந்தார்.
அப்போது முன்னாள் சென்ற ஏழுமலை மகன் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை முந்த பின்னால் சென்ற முத்துக்கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் முயன்றார். இதில் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் ஏழுமலை மகன் வெங்கடேசன் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் விவசாயப் பணி செய்து கொண்டிருந்தவர்கள் பலத்த காயமடைந்த வெங்கடேசனை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை மகன் வெங்கடேசன் உயிரிழந்தார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள மகாசிபுதூர் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (21). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை- அந்தியூர் ரோட்டில் தோப்பு காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கோவிந்தன் மோட்டார் கைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தன் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே கோவிந்தன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணேசமூர்த்தி நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
- இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந்தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நேருக்குநேர் மோதியது
- பேலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56).
இவர் நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை தனியார் திரையரங்கம் அருகே தனது மோட்டர் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த சோளிங்கர் அடுத்த நாரைகுளம் மேடு பகுதியை சேர்ந்த தீனா (21) ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் சரவணன் மீது நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த தீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 26-ந் தேதி காலை கபிலர்மலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
- அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 62), பால் வியாபாரி.
இவர் கடந்த 26-ந் தேதி காலை கபிலர்மலைக்கு சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கபிலர்மலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று தலைமறைவான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சந்திரசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது.
- இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் குட்டம் பட்டியை சேர்ந்தவர் ஊர் ஊராக சென்று குறி ஜோசியம் பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருமாள் சிறுவலூர் கொளப்பலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்
அப்போது கெட்டி சேவி யூரைச் சேர்ந்த சந்திரசேகரன் வயது 48 என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது.
இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பெருமாளுக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார்
- சம்பவத்தன்று ஐகோர்ட்ராஜா தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
நாங்குநேரி ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கந்தையா மகன் ஐகோர்ட்ராஜா (வயது38). கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி-நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, எதிரே தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஐகோர்ட் ராஜாவும், அவரது மனைவி மஞ்சம்மா தேவியும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்தையா கடந்த மாதம் 16-ந்தேதி சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா தூக்கி வீசப்பட்டார்.
- இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்தையா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தையா. இவர் வடக்கு இலந்தை குளம் பஞ்சாயத்து துணை தலைவர் இருந்து வந்தார்.
விபத்து
இந்நிலையில் இவர் கடந்த கயத்தாறில் இருந்து வடக்கு இலந்தைகுளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிள் சென்றார். அவர் சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு சென்று அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்தையா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தை யாவுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகன்களும் உள்ளனர்.
- நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
- சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி பகுதியை சேர்த்தவர் ராஜா. இவரது மகன் மாதேஷ் (23). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மாதேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மின் விளக்கை ஒளிர விடாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.