search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்த்திக் பாண்ட்யா"

    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. இதனால் குஜராத் அணிக்கு 189 ரன் இலக்காக இருந்தது.

    ஜோஸ்பட்லர் 56 பந்தில் 89 ரன்னும் ( 12 பவுண்டரி , 2 சிக்சர் ) , கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர். முகமது ஷமி , தயாள், சாய் கிஷோர் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    டேவிட் மில்லர் 38 பந்தில் 68 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 பந்தில் 40 ரன்னும் ( 5 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 21 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேட் 30 பந்தில் 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். டிரெண்ட் போல்ட், மெக்காய் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    புதுமுக அணியான குஜராத் தனது முதல் சீசனிலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதித்தது.

    குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லரை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு மாதிரியானவர்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

    ரஷீத்கான் பந்து வீச்சு நன்றாக இருந்தது. மீண்டும் அவருக்கு பந்து வீச்சில் நல்ல நாளாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் அவர் கிரிக்கெட் பயணம் அற்புதமாக இருந்தது.

    இந்த போட்டித் தொடரில் டேவிட் மில்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

    நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன்.

    நான் எனது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை சமநிலைப்படுத்த தொடங்கி விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக இது ஒரு நிலையான முயற்சியாகும். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற குடும்பம் உதவியது.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    முதலில் ஆடி 188 ரன் குவித்தது மகிழ்ச்சியை அளித்தது. இது நல்ல ஸ்கோர்தான் என்று கருதினோம். ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது.

    இந்தப் போட்டி தொடரில் அதிர்ஷ்டம் (டாஸ்) முக்கிய பங்கு வகிக்கிறது. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்தப் போட்டியில்நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம் என ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
    கோப்பையை வென்றது குறித்து குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஒரு அணியாக விளையாடினால் அற்புதங்களை செய்ய முடியும் என்பதற்கு இந்த அணியே சரியான உதாரணம்.

    நானும், பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ராவும் சிந்தனையில் ஒரே மாதிரியானவர்கள். போட்டிகளை வெல்லக் கூடிய சரியான பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க விரும்பினோம். 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கலாம்.

    ஆனால் பந்து வீச்சாளர்கள் உங்களை வெற்றி பெற வைப்பார்கள். வீரர்களுக்கு அணி ஊழியர்கள் வழங்கிய ஆதரவு அற்புதமானது. போட்டிகளில் நாங்கள் தவற விட்ட விஷயங்கள் என்ன, எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றி எப்போதும் பேசினோம்.

    5 இறுதிப்போட்டிகளில் (மும்பை அணியில் விளையாடிய போது) வெற்றி பெற்றதால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.

    குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளோம். வரும் தலைமுறையினர் இதை பற்றி பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×