என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331692
நீங்கள் தேடியது "Rajya Sabha election"
பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால் மாநிலங்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை சூடுபிடித்துள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் கர்நாடகாவில் இருந்து மீண்டும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனும், மகாராஷ்டிராவில் இருந்து மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் வெளியான சிறிது நேரத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 10 பேர் இடம் பெற வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
மேலும் சட்டீஸ்கரில் இருந்து ராஜீவ் சுக்லாவும், ஹரியானாவில் இருந்து அஜய் மக்கானும், கர்நாடகாவில் இருந்து ஜெயராம் ரமேஷ், ராஜஸ்தானில் இருந்து முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும், உள்ளிட்டோரும் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள மொத்தம் 57 இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி 15 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 31 கடைசி நாள் ஆகும்.
×

X