என் மலர்
நீங்கள் தேடியது "வடிகால்"
- மின்விளக்குகள் சரிவர எரியாததால் பொதுமக்கள் அச்சம்.
- மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் 14 வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது கவுன்சிலர் ஜெயந்தி பாபு தலைமை வைத்தார் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 14வது வார்டில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மது பிரியர்கள் மது குடித்து வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே அனைத்து மின் விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டன கூட்டத்தில் 14 வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
- அம்மாலூர் கிராமத்தில் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
- பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் எடையூர் வருவாய் கிராமத்தை சேர்ந்த அம்மலூர் கிராமம், வாடி காலனி கிளைதாங்கி ஆற்று கரையை ஒட்டி அமைந்துள்ளது.
இது சுற்றுப்பகுதி கிராமங்கள் விட மிகவும் பள்ளமான கிராமம். தற்போது பெய்த தொடர் மழையால் கிராமத்தில் சேர்ந்த 450 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கி உள்ளது.
2 நாட்களின் நீர் வடிந்தால் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். மேடான சித்தாளந்தூர், கடுவெளி, வெள்ளங்கால் கிராமங்களில் தண்ணீர் வடிந்து பிறகு தான் அம்மாலூர் கிராமத்தின் தண்ணீர் கிளைதாங்கி ஆறு வடிகாலில் வடியும்.
அதற்குள் பயிர்கள் அழுகி விடும் சூழ்நிலை உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரி சாமிநாதன் ஆய்வு செய்தார்.
எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சார பம்பு செட்டு அமைத்து மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வடிகால் ஆற்றில் இறைத்து இக்கிராம விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் அம்மலூர் கிராம கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம், பழம் பாண்டி ஆறு பாசன கமிட்டி தலைவர் மோகன், விவசாயிகள் பாண்டி, கேட்டடி துரைராஜ், பூமிநாதன், ஜெயராமன், கணேசன், இளங்கோவன், பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
- வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.
இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-
கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
- கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
- இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.
கடலூர் :
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர். இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
கடலூர்:
கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறு வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட் டாம்பாக்கம் வரை ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நெல்லிக்குப்பத்தில் கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வடிகால் வாய்க் காலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ஆனால் கொட்டும் மழையிலும் தேங்கி இருந்த மழை நீரில் விடாப்படியாக ஊழி யர்கள் தலையில் துண்டு அணிந்து கொண்டு சிமெண்ட் கலவை கொட்டி வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அறிந்து மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மழை, வெயில் என்று பாராமல் வேலை செய்து வருவதாக கடும் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் தற்போது இந்த பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதால் சில மாதங்களில் தரமற்ற பணியால் வடிகால் வாய்க்கால் இடிந்து விழுவதோடு சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அல்லது பொதுமக்கள் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு கள் அகற்றம் செய்யாமல் கடமைக்கு பணி செய்து வருவதாக கடந்த 3 நாட்கள் முன்பு வரை சுமார் 8 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை யினர் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கொட்டும் மழையிலும் சிமெண்ட் கலவை அமைத்து வடிகால் அமைக்கும் பணியை எந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாமல் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். ஆகையால் கலெக்டர் அருள் தம்புராஜ், சாலை விரிவாக்க பணி மற்றும் வடிகால் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா? என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
- குடிநீர் அளவு குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் பேட்டியளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஆத்தூர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வாரிய அதிகாரியிடம் ஆத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறித்து கேட்டறிந்தனர்.
தனிக்குழு
அதன் பின்னர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் அவை முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாள் ஒன்றுக்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும் தண்ணீர் வினியோகம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ், மண்டல நகராட்சி இயக்குனர் பூங்கொடி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஆத்தூர் நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.