என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரோன்"

    • பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்கள் ஊடுருவல்.
    • சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளவர்களின் முகவரியை கண்காணிக்க முடியும்.

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: 

    ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில் அண்மையில் அதிநவீன ஆய்வகத்தை எல்லை பாதுகாப்பு படை நிறுவி உள்ளது. அதன் முடிவுகள் எங்களுக்க மிகவும் ஊக்கமளிக்கின்றன. இதன் மூலம் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் முகவரியைக் கூட பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்காணிக்க முடியும்.

    கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே ஊடுருவிய சுமார் 79 ட்ரோன்களை பி.எஸ்.எஃப். கண்டறிந்தது. ​​​​இது கடந்த ஆண்டு 109 ஆக அதிகரித்தது. நடப்பு ஆண்டில் அது 266 ஆக அதிகரித்துள்ளது.

    பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்த ஆண்டு 215 ட்ரோன்களும், ஜம்முவில் சுமார் 22 ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தீவிரமானது. அவர்கள் (பயங்கரவாதிகள்) ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போலி ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து ட்ரோனை கைப்பற்றினர்.
    • இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதியை நோக்கி ஒரு ட்ரோன் பறந்து வந்ததை கவனித்தனர்.

    உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது. ஆனால் அதற்குள் ட்ரோன் விழுந்துவிட்டது. நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து அந்த ட்ரோனை கைப்பற்றினர். 6 இறக்கைகளுடன் கூடிய அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 2 மேகசின்கள் மற்றும் 40 ரவுண்டு சுடக்கூடிய புல்லட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    • ஆளில்லா விமானங்களில் இருந்து 125.174 கிலோ ஹெரோயின், 0.100 கிலோ அபின் கடத்தல்.
    • சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எல்லைகளில் திறம்பட ஆதிக்கம் செலுத்துகிறது.

    பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்துவதற்காக தேச விரோதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற 28 ஆளில்லா விமானங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமாணிக் மக்களவையில் தெரிவித்தார்.

    சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ரோந்து, தடுப்பு அமைத்தல், கண்காணிப்புச் சாவடிகளை நிர்வகித்தல் போன்றவற்றை 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எல்லைகளில் திறம்பட ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

    மேலும் அவர்," மற்ற ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தவிர ஆளில்லா விமானங்களில் இருந்து 125.174 கிலோ ஹெரோயின், 0.100 கிலோ அபின், ஒரு 9 மிமீ அளவு பிஸ்டல், 7 கைத்துப்பாக்கிகள் அல்லது மீட்கப்பட்டுள்ளன.

    ட்ரோன்களைக் கையாள்வதில் உள்ள தொழில்நுட்பத்தை மதிப்பிடுவதற்கும் அதன் செயல்திறனைச் சான்றளிப்பதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பிஎஸ்எஃப் டிஜியின் மேற்பார்வையின் கீழ் ஆளில்லா தொழில்நுட்பக் குழுவை நிறுவியுள்ளது" என்றார்.

    • பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை.
    • பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையின் எதிர் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    பஞ்சாபை சேர்ந்த மல்கித் சிங், தர்மேந்திர சிங் மற்றும் ஹர்பால் சிங் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. செல்போனை ஆய்வு செய்ததில், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து தொடர்புக் கொண்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    போதைப் பொருளை கையாளுபவர்கள் இந்த எண்களை பயன்படுத்தி பாகிஸ்தானால் கடத்தப்பட்ட போதைப்பொருள் சரக்குகளை எங்கு சேகரிக்க வேண்டும் என்றும், அது பின்னர் பஞ்சாபில் உள்ள சப்ளை செய்வது தொடர்பாகவும் தகவல் பகிரப்பட்டு வந்துள்ளது. மேலும், பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
    • ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவாகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிர்கள், பூ பூத்து காய் காய்க்கும் தருவாயில் செம்பேன் காய்புலுவால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

    பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம்பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வருகின்றனர்.

    மேலும் விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் கூலி உயர்வு காரணமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது தனியார் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவு ஆகிறது.

    எனவே வேளாண்மைதுறை மூலம் இலவசமாக அல்லது மான்ய முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம்.
    • ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ட்ரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    நேரடி நெல் விதைப்பின் முக்கியத்துவத்தையும், நெல் சாகுபடி முறையில் ஏற்படக்கூடிய ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ட்ரோன் தொழில்நுட்பம் மிகச்சிறந்தது.

    மேலும், 45-50 கிலோ விதையை பயன்படுத்தி 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம். களைகளை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

    இதில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பழனிச்சாமி, இயக்குனர் ரகுநாதன் மற்றும் கமலஹாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உளவியல் இணை பேராசிரியர் இளமதி செய்திருந்தார்.

    • ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை.
    • சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.

    சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.

    இங்கு, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

    இதன் எதிரொலியால், சென்னையில் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    • பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.
    • எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்து இந்திய ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் பயங்கரவாதிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அதி நவீன வசதி கொண்ட ட்ரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும்.

    அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு ஜம்மு காஷ்மீர் ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளது.

    இதேபோல் எல்லை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைபொருட்களும் கடத்தப்படுகிறது. இதனையும் அதி நவீன வசதி கொண்ட ட்ரோனை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    • மோடி AI குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில் நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
    • தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளைஞர்களைப் பணியமர்த்தவும் தொழில்நுட்பத் துறையை முன்னேறவும் வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான அரசின் கொள்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ட்ரோன்கள் போர்க்களத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் ஒளியியல் ஆகியவற்றை இணைத்து ட்ரோன்கள் போரில் புதிய உத்திகளை உருவாகியுள்ளன.

    ட்ரோன்கள் வெறும் ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல. அவை ஒரு வலுவான தொழில்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்.

    துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அவர் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில், நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

    இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை.

    இந்தியாவுக்கு மகத்தான திறமை, வாய்ப்பு மற்றும் உந்துதல் உள்ளது. நமது இளைஞர்களுக்கு வேலைகளை வழங்கவும், இந்தியாவை எதிர்காலத்தில் வழிநடத்தவும் நமக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான தொழில்துறை வலிமையை உருவாக்க வேண்டும் என்று அதில் பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே இந்திய குடிமக்கள் தங்கள் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள 'ஆவாஸ் பாரத் கி' என்ற முன்னெடுப்பை ராகுல் காந்தி தொடங்கியிருந்தார்.

    இதில் தற்போது AI மற்றும் ட்ரோன்கள் துறையில் பணிபுரிந்தால் அல்லது இந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஆலோசனை வழங்க விரும்பினால் அதையும் பகிர்ந்து கொள்ளுமாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதை நாங்கள் கண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹாத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு ட்ரோன் செயல் விளக்கங்கள், 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தப்பட்டன.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    தொழில்நுட்பத்தால் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. மண் சுகாதார அட்டைகள், இ-நாம் அல்லது ட்ரோன்கள் எதுவாக இருந்தாலும் அவை விவசாயத் துறையில் கேம் சேஞ்சராக உருவாகி வருகின்றன.

    கடந்த எட்டு ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை நாங்கள் கண்டுள்ளோம். விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதை நாங்கள் கண்டுள்ளோம்.

    விவசாயத் துறை இப்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாறுகிறது. கடைசி மைல் சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதில் ட்ரோன்கள் முக்கியமானதாக இருக்கும். கோவிட் காலத்தில் கூட ட்ரோன்கள் தடுப்பூசிகளை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு வழங்க உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி
    ×