என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாகுபடி வயல்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி
- கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
- ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவாகிறது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிர்கள், பூ பூத்து காய் காய்க்கும் தருவாயில் செம்பேன் காய்புலுவால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம்பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வருகின்றனர்.
மேலும் விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் கூலி உயர்வு காரணமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது தனியார் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவு ஆகிறது.
எனவே வேளாண்மைதுறை மூலம் இலவசமாக அல்லது மான்ய முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.