என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் பறந்து வந்த ட்ரோன்... சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை
- நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து ட்ரோனை கைப்பற்றினர்.
- இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதியை நோக்கி ஒரு ட்ரோன் பறந்து வந்ததை கவனித்தனர்.
உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது. ஆனால் அதற்குள் ட்ரோன் விழுந்துவிட்டது. நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து அந்த ட்ரோனை கைப்பற்றினர். 6 இறக்கைகளுடன் கூடிய அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 2 மேகசின்கள் மற்றும் 40 ரவுண்டு சுடக்கூடிய புல்லட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.