search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழாய்வு"

    • சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.
    • இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

    தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை" - 2441

    பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவகாந்தமணி பாடல்.

    இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.

    இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரும்புப் பொருட்கள், இராசராச சோழன் காலத்துச் செப்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மேலுமொரு சான்று கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.
    • கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கொங்கல்நகரம் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு தொல்லியல்துறை சார்பில் அப்பகுதியில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.

    தமிழகம் முழுவதும் கொங்கல்நகரம் உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி ஜூன் 2024ல் பணிகள் தொடங்கியது.

    முதற்கட்டமாக கொங்கல்நகரம் அருகிலுள்ள சோ.அம்மாபட்டி பகுதியில் பழங்காலத்தை சேர்ந்த வாழ்விட பகுதி தேர்வு செய்யப்பட்டு அகழாய்வு செய்ததில் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள், காதணி மற்றும் இதர அணிகலன்கள் கண்டறிய ப்பட்டன.

    நவம்பரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும், தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது 2-ம் கட்ட பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    இப்பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்களை கொண்டு உடுமலையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

    இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன.

    கீழடியில் 5 குழிகளும். கொந்தகை மற்றும் அகரத்தில் தலா 2 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் இந்த ஆய்வில் கீழடியில் 2 மெகா சைஸ் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

    மேலும் சில நாட்களுக்கு முன்பு பழங்காலத்தில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்ட வடிவிலான சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து தற்போது அந்த இடத்தில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை காய்ச்சி ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்திருக்கலாம் என்றும், கீழடியில் இரும்பை உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகிறது.

    6-ம் கட்ட அகழாய்வின் போது இரும்பு ஆயுதம், குத்துவாள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. எனவே 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வின் போது மேலும் பல உறுதியான ஆதாரம் வெளிப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ×