என் மலர்
நீங்கள் தேடியது "Students"
- “2001-2006-ம் கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- வெப்படை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் "2001-2006-ம் கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பச்சைக்கல் முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் செல்லப்பன் முன்னிலை வகித்தார். அவ்வருடங்களில் உதவி தலைமையாசிரியாக இருந்து, தற்போது வெப்படை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.
முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியரும் , வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளரும், ஸ்ரீசத்ய சாயி மாவட்டத் தலைவருமாகிய சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் ரமணி, கோபு, காளியப்பன், சேகர், சாந்தி, கந்தசாமி, மகேஸ், மோகனா ஆகியோர் கலந்து கொண்டனர்! அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஒன்று கூட 'ஆனந்தப் பறவைகள் ' என்னும் அமைப்பு துவங்கப் பட்டது. மாணவி அனிஷா நன்றி கூறினார் . மாணவர்கள் தியானேஸ்வரும், அனிஷாவும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல் பட்டனர்.
- ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் தேர்வு செய்யும் பயிற்சி.
- தேர்வான மாணவர்களுக்கு கலர் பெல்ட் வழங்கல்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் தேர்வு செய்யும் பயிற்சி நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதில், மன்னார்குடி இஷின்ரியு கராத்தே தலைமை பயிற்சியாளர் கியோஷி ராஜகோபால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கலர் பெல்ட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர்கள் பழனிச்சாமி, சென்சாய் மீனாட்சி சுந்தரம், இனியன், நிகன் அபிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
- பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.
திருவாரூர்:
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு-2023" மாவட்டக் கருத்தாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மாணவ, மாணவியர்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டு தல்கள் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
இம்முயற்சியின் நோக்கம் 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்களது கல்லூரி படிப்பிற்கு உறுதுணையாக அமையும். அரசு தேர்வாணை யத்தால் நடத்தப்படும் சில தேர்வுகளுக்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.
கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களது பெற்றோர்களின் உழைப்பை மனதிற்கொண்டு சிறப்பாக பயின்று அவர்களின் கல்வி திறனை மேன்மேலும் உயர்த்தி கொள்ள நம் முயற்சிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிக டன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது.
இதனை மாணவ, மாணவியர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கிடலாம் என்பதனை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அறிந்து அவர்களுக்கு அத்துறையில் கல்விபயிலவும், தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பொதுத்தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தவறவிட்டாலும் கலங்காது துணைத்தேர்வில் நல்ல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற நாம் உறுதுணையாக இருந்து அவர்கள் உயர்கல்வி பெற்றிட நாம் உதவி வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி திரு.தியாகபாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சுழற்சி அடிப்படையில் இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர்:
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ரோல்பால் சங்கம் சார்பில் புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணி நேர தொடர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மணி நேர சுழற்சி அடிப்படையில் இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, தென்னிந்திய ரோல்பால் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணை தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளரும், சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்றுனருமான மணிகண்டன் செய்திருந்தார்.
- பிளஸ்-2-வில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தகுதியுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-
ஹெச்சிஎல் நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு ஹெச்சிஎல் டெக்னாலஜில் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்தி லுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைகழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம்., பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை
பட்டபடிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்றுதரப்படும்.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 -ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இ எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பி ற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இத்திட்டத்தில் வருடாரந்திர ஊதியமாக ரூ.1,70,000- முதல் ரூ.2,20,000- வரை பெறலாம்.
மேலும் திறமைக்கேற்ற வாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.
இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம்
www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவல கத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்க ளுடன் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவல கத்தை அணுகவும் தொலை பேசி எண்:04364-211217.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.
- கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே தென்பொன்முடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்வி முடித்து பட்ட படிப்புக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 2003-ம் ஆண்டு இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில் இந்த பள்ளியில் 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நண்பர்கள் சந்தித்துக் கொண்டதால் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் அந்த காலகட்டத்தில் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர், ஆசிரியைகளையும் வரவழைத்து அவர்களையும் கவுரப்படுத்தி, அவர்களிடம் வாழ்த்தும் பெற்று கொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் தங்கள் நண்பர்களிடம் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.
அத்துடன் தங்கள் காலகட்டமான 90 காலகட்டத்தில் இருந்த அப்போதைய திண்பண்டங்களான ஆரஞ்சு மிட்டாய், பொரி உருண்டை, ஜவ்வு மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், புளி மிட்டாய் என பல்வேறு விதமான மிட்டாய்களை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் இந்த மிட்டாய்களின் சிறப்பினையும், தாங்கள் படித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்தனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.
அத்துடன் பள்ளி மைதானத்தை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்களும் வழங்கினர்.
கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது.
- வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள்.
- சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை:
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு உள்ளூரைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து படிக்கிறார்கள். மேலும் பலர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனியார் விடுதிகளிலும் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்.
இவ்வாறு தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக கோவை போலீசார் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தங்கும் விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். சூலூர் பகுதியில் கடந்த வாரம் நடத்திய சோதனையின்போது போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து ஒரு கும்பல் மாணவர்கள் மத்தியில் சப்ளை செய்து வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை ரெயிலில் கோவைக்கு கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன், மாணவர்கள் அல்லாத சிலரும் தங்கியிருப்பதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 450 தனிப்படை போலீசார் செட்டிபாளையம், மதுக்கரை, கே.கே. சாவடி பகுதிகளில் மாணவர்கள் தனியாக தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் விடுதிகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அறைகளில் கஞ்சா, போதை மாத்திரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், அவர்கள் கல்லூரி மாணவர்கள் தானா? அவர்களது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்கள் வைத்துள்ள வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், பைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் போதைப்பொருள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.
இதில் மாணவர்கள் சிலர் நேரடியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்கள் இவ்வாறு போதைப்பொருள்கள் விற்பனை செய்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இவர்களின் பெற்றோர் சமூகத்தில் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து, போதைப்பொருளும் விற்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த மாணவர்களை கண்டுபிடித்து இந்த நெட்வொர்க்கை உடைக்கவும் அவர்களை போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கொனிஜார்லா அடுத்த தணிகெல்லாவில் உள்ள பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.
நேற்று மாணவ மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து வந்து சாலையில் 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை ஏந்தி தேசபக்தி பாடல்களை பாடியபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.
பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.