என் மலர்
நீங்கள் தேடியது "tag 94837"
- திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 38).
- திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 38). பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் எக்ஸ்ரே டெக்னீசினியாக பணிபுரிந்து வருந்தார்.
இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் ஹரிஹரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கணவன்- மனைவியிடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிஹரணை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டார். குழந்தை இல்லாத ஏக்கத்தாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மப்பேடு போலீசார் ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தக்கலையைச் சேர்ந்த ராணுவ வீரர்
- பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபர்சன் (வயது 34), ராணுவ வீரர். இவரது மனைவி அனிஷா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் விடு முறை முடிந்து பணிக்கு திரும்பி சென்றார்.
அங்கிருந்தபடி குடும்பத்தினருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தின் அருகே உள்ள மரத்தில் ஜெபர்சன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்த ஜெபர்சன் உடல் இன்று மாலை குழிக்கோடு கொண்டு வரப்படுகிறது. பணி செய்ய சென்ற இடத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் குழிக்கோடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- எனக்கு வாழப்பிடிக்க வில்லை, அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூர் 2-வது ரெயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரெயில் அடிப்பட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த சிறுவன் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிைடயே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்த போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரிய வந்தது.
அந்த கடிதத்தில் , எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப்பிடிக்க வில்லை .அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சத்தியமங்கலம் அருகே தலை வலியால் அவதி அடைந்து வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உதயண்டியூர் பூசாரி–பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகரத்தினம் (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனிசாமி புத்தக கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நாகரத்தினம் கடந்த சில நாட்களாகவே தலை வலியால் அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நாகரத்தினம், அவரது கணவர் மகன், மகள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நாகரத்தினம் திடீரென தனக்கு தலை வலிப்பதாக கூறி வீட்டிலுள்ள அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார்.
இதனால் அவரது கணவர்,மகன், மகள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாகரத்தினம் தூக்குபோட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
- எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
சம்மட்டிபுரம், ஸ்ரீராம் நகர், முல்லை தெருவை சேர்ந்த மாடசாமி மனைவி முத்துலட்சுமி (70), மனநலம் பாதித்தவர். வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
- தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள காமராஜர்நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 32). கூலிதொழிலாளி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
குருமூர்த்திக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.
- ேபாலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த காவனூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 59). இவர் வீட்டின் அருகே டிபன் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு உடல் நலம்பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் கருணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.