என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95595"

    • நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும்.
    • வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பர்.

    திருமணத்திற்கென்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும் பொழுது கூடுதலாக நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம் குறிக்க வேண்டும்.

    1. முகூர்த்தக் கால் நாட்ட, 2. மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம், 3. பெண் அழைப்பிற்கான நேரம், 4. திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம், 5. சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்

    இதில், பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பர். அதே சமயம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம்.

    நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும்.

    அதே நேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால் பிறக்கும் குழந்தை பிறர் போற்றும் அளவு வாழ்க்கையில் உயரும்.

    • கல்லூரியில் பணிபுரியும் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது.
    • மணமகளின் சகோதரரும் வெளிநாட்டில் இருந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ யுனிவர்சிட்டியில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் அந்த கல்லூரியில் பணிபுரியும் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளார்கள். இதனால் இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானிலிருந்து சியாங் ஷியா ஜோன், ராஜேந்திரனும் காவேரிப்பட்டணம் வந்தனர்.

    இன்று காலை காவேரிப்பட்டணம் கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நிர்வாகி அருள் மூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன், சியாங் ஷியா ஜோன் ஆகியோருக்கு உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றது. மணமகளின் சகோதரரும் வெளிநாட்டில் இருந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

    இந்த திருமணம் குறித்து மணமகள் சியாங் ஷியா ஜோன் கூறியபோது நாங்கள் இருவரும் காதலித்தோம். இந்நிலையில் திருமணம் செய்ய இரு வீட்டார் சம்மதத்துடன் இந்தியா வந்தோம். இன்று தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    • தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
    • மினிபஸ் டிரைவர் சிபின் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே காரியாவிளையை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி சுஜிலா (வயது 28). இவர் மருந்தாளுநர் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் சுஜிலா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுஜிலாவுக்கு வந்த செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    இதில் குருந்தன்கோடை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின் என்பவர் சுஜிலாவிற்கு அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இவர் செல்போன் மூலம் சுஜிலாவிற்கு அதிக தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுஜிலா தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு காஷ்மீரில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 26 ஆக உள்ளது.
    • கடந்த 2020-ம் ஆண்டில் கேரளாவில் 18 வயதுக்குட்பட்ட திருமணம் எதுவும் இல்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் பெரும்பான்மையான பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் சராசரியாக 50.2 சதவீதம், ஜார்க்கண்டில் 48.8 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் டெல்லியில் இந்த சதவீதம் 15.5 ஆக உள்ளது.

    நாடு முழுவதும் ஏறக்குறைய 30 சதவீத பெண்கள் தங்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்ற அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜம்மு காஷ்மீரில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 26 ஆக உள்ளது.

    அங்கு 21 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் 8.2 ஆக உள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 24.4 ஆக இருக்கிறது. இந்த விகிதம் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் 21 ஆகவும், ஒடிசாவில் 22 ஆகவும் மிகக் குறைவாக இருந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டில் கேரளாவில் 18 வயதுக்குட்பட்ட திருமணம் எதுவும் இல்லை. கேரளாவில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை பீகாரை போல 72.6 சதவீதமாக உள்ளது.

    மொத்தத்தில் நாடு முழுவதும் 70.5 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்கு மேல் திருமணம் நடப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் ஜம்மு காஷ்மீரில் 90.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

    குஜராத்தில் 85.2 சதவீதம், உத்தரகாண்டில் 84 சதவீதம், பஞ்சாபில் 83 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 82.7 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களில் 3-ல் ஒரு பகுதியினர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது நகர்ப்புறங்களில் 18.6 சதவீதம் ஆகும்.

    18 வயதிற்குட்பட்ட திருமணங்கள் ஜார்க்கண்டில் அதிகமாக (5.8 சதவீதம்) உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மேற்குவங்கம் (4.7 சதவீதம்) உள்ளது. ஒடிசா, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இந்த சதவீதம் 3-க்கும் அதிகமாக உள்ளது.

    • சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்ததில் திருமணம் நடைபெற்றது உண்மையென தெரியவந்தது.
    • காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்ததில் திருமணம் நடைபெற்றது, உண்மையென தெரியவந்தது.

    இந்த நிலையில் ஊர்நல அலுவலர் ஜோதியம்மாள் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காரைக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை திருமணம் நடத்தி வைக்க உடந்தையாக இருந்த காரணத்தால் 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபர் 2 பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார்.
    • வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் தனது செல்போனில் டிக் டாக் செய்து வந்தார். இவரது டிக் டாக்கை கண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாலிபருடன் நட்பாக பேசி பழகினார்.

    இருவரும் தினந்தோறும் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையெடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதேபோல் கடப்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் வாலிபரின் டிக் டாக்கில் மயங்கி அவரை காதலிக்க தொடங்கினார்.

    வாலிபரும் 2 பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணை வாலிபர் திருமணம் செய்தார்.

    விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம் வாலிபர் சிறிது நாட்கள் பேசாததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வாலிபரின் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதால் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன் அதனால் என்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாலிபரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து ஏற்கனவே திருமணம் செய்த முதல் மனைவியிடம் நடந்தவற்றை வாலிபர் கூறியிருந்ததால் 2-வது திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.

    இதையடுத்து விசாகப்பட்டினம் இளம்பெண்ணை வாலிபர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். டிக் டாக் செயலி மூலம் 2 பெண்களை மயக்கி திருமணம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை தவிப்பது நல்லது.
    • சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது.

    தசையை நடத்தும் கிரகத்தை விட தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். பலர் கேந்திர திரிகோணதிபதிகள் தசை நடக்கும் போது கூட சந்திக்கும் இடர்பாடுகளுக்கு தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்களான தம்பதிகள் கூட பகை கிரகங்களின் தசை புத்தி காலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர். எனவே பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை இணைப்பதை இயன்றவரை தவிர்த்தால் தம்பதியர்கள் அன்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    சூரியன் + ராகு/கேது

    சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது. இந்த கிரக சம்பந்தம் கிரகண தோஷம். ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைகள் தரும். கவுரவத்தை குறைக்கும். ஊர், உலகத்திற்காக வாழ நேரிடும். அரசு வகை ஆதரவை தடை செய்யும். ஆண் வாரிசு குறையும். இது போன்ற பகை கிரக தசை புத்தியால் சிரமங்களை சந்திக்கும் தம்பதிகள் கிரகண காலங்களில் பித்ரு தர்பணம் செய்ய விரைவில் சுப பலன் கிட்டும்.

    சந்திரன்+ புதன்

    இந்த பகை கிரக தசை புத்தி காலங்களில் நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட நோய் உருவாகும். சிலருக்கு மனநோய், மன அழுத்தம் ஏற்படும். சிலருக்கு இந்த தசை புத்தி திருமணத்திற்கு பிறகு தவறான நட்பை ஏற்படுத்துகிறது. மனசஞ்சலத்தால் எளிதில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தசை புத்தியால் சிரமத்தை சந்திக்கும் தம்பதிகள் புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை 108 முறை வலம் வர வேண்டும்.

    சந்திரன் + சுக்கிரன்

    சந்திரன் மாமியார்,சுக்கிரன் மருமகள். இந்த தசை, புத்தி காலங்களில் ஆண் பெண் இருவருக்கும் மாமியார் டார்ச்சர் உண்டு. சந்திரன் வலிமை குறைந்து இருக்கும் மருமகளை மாமியார்கள் பிறந்த வீட்டிற்கு அனுப்ப எந்த பழியையும் சுமத்த தயங்குவதில்லை. சுக்கிரன் வலிமை படைத்த பெண்கள் மாமியாரை வீட்டு வேலை செய்யும் அடிமையாக்கி விடுகிறார்கள். ஆண்கள் மனைவியின் அன்பிற்காக மாமியாரை அனுசரித்து வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. பிடிக்காத மாமியாருக்காக மனைவியை புகுந்த வீட்டிற்கே அனுப்பாமல் இருக்கும் கணவரும் உண்டு. இந்த அமைப்பு பிறந்த வீட்டு பெண்ணிற்கும், புகுந்த வீட்டுப் பெண்களுக்கும் மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படுகிறது. சிலருக்கு பண இழப்பு மிகுதியாக இருக்கும். இது போன்ற அவஸ்தை இருக்கும் தம்பதிகள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பச்சரிசி மாவில் மாவிளக்கு தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

    சந்திரன் + சனி

    சந்திர தசை, சனி தசை நடக்கும் ஜாதகத்தை பொருத்தக் கூடாது. ஆண், பெண் இருவரையும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பாதிக்கும். வாழ்கையில் தடை, தாமதத்தை அதிகம் தருகிறது. காலாகாலத்தில் எதுவும் நடக்காது. எல்லாம் கால தாமதமாகவே நடக்கும். தாமதத் திருமணம், மன உளைச்சல் நிம்மதியின்மை, தாயார் வழி விரயம், வியாதி, அடிக்கடி தொழில், வேலையை மாற்றுதல் இருக்கும். கால்சிய சத்து குறைவு, மூட்டு தேய்மானம் போன்ற அவஸ்த்தையை தரும். இவர்கள் சனிக்கிழமைகளில் பசுவிற்கு பச்சரிசி, அகத்திக்கீரை வழங்க வேண்டும்.

    சந்திரன் + ராகு/கேது

    சந்திர தசை நடப்பவர்களுக்கு ராகு/கேது தசை நடக்கும் தசை நடக்கும் ஜாதகத்தை இணைக்க கூடாது. இந்த கிரகச் சேர்க்கை ஆண், பெண்களை மனம் ஒன்றி வாழ விடுவதில்லை. தீராத மன உளைச்சல், மன நோயை மிகுதியாக்கி குடும்ப வாழ்க்கையை வெறுத்து தனிமைப்படுத்தி விடுகிறது. சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவர்களுக்கு இந்த கிரக தசை, புத்தி சம்பந்தம் இருக்கும். இவர்களின் பிரிவினைக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய காரணமே இருக்காது. இது போன்ற பிரச்சினை இருக்கும் தம்பதிகள் சர்ப்பம் உள்ள புற்றிற்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    செவ்வாய் + புதன்

    செவ்வாய், புதன் பகை கிரகங்கள் என்பதால் இந்த கிரகங்களின் தசை நடக்கும் ஜாதகங்களை சேர்க்க கூடாது.அத்துடன் திருமணத்திற்கு பிறகும் இந்த கிரகங்களின் தசை சந்திப்பு இருக்க கூடாது. தைரியமான தவறான நட்பை திருமணத்திற்கு பிறகு ஏற்படுத்தி விடும். 7-ம் பாவகம் வலிமையானவர்களை இது பாதிக்காது. இவர்கள் செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.

    செவ்வாய் + சனி

    திருமணத்திற்கு முன்னும், பின்னும் செவ்வாய், சனி தசை சந்திப்பு ஆண், பெண் இருவருக்கும் இருக்க கூடாது. பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும் ஆண்களுக்கு தொழில் நெருக்கடியும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி விபத்து கண்டம், சொத்து தகராறை ஏற்படுத்தும். இவர்கள் செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தர வேண்டும். சனிக்கிழமைகளில் பருப்பு சாதத்தை அன்னதானம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் + ராகு/கேது

    செவ்வாய் தசை நடப்பவருக்கு ராகு/கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஆண்களுக்கு உடன் பிறந்தவர்க ளுடனும், பெண் களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும் பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தருகிறது. திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதை தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுரவப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும் தசை புத்தியில் செவ்வாய் + ராகு /கேதுக்களே முதலிடம். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது. இவர்கள் மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும்.

    சுக்கிரன் + கேது

    சுக்கிரன்,கேது தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்க கூடாது. ஆண்களுக்கு சாதகமற்ற பகை கிரகச் சேர்க்கை . சுக்கிரன் + ராகு இரண்டும் போகத்தை தரும் நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்பை தராது. பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை. திருமணத்திற்கு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும். இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. இவர்கள் வீட்டின் பூஜை அறையில் 2 டைமன் கல்கண்டு போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நிம்மதி அதிகரிக்கும்.

    சனி +ராகு/கேது

    இந்த 3 கிரகங்களும் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் சனி, ராகு, கேது தசை நடக்கும் ஜாதகங்களை ஒன்றோடு ஒன்று இணைக்க கூடாது. இந்த கிரக தசை நடக்கும் ஜாதகங்கள் தாளமுடியாத வினைப் பதிவால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இந்த தசை, புத்தி நடப்பில் இருக்கும் தம்பதிகள் சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்த்து சிவ வழிபாட்டை கடைபிடித்தால் துக்கம் குறையும். முறையான திருமணப் பொருத்தம் மட்டுமே நிம்மதியான திருமண வாழ்க்கை யைத் தருகிறது. மானிட வாழ்வில் நன்மை, தீமைகளை தீர்மானிப்பதில் தசை புத்தியின் வலிமையே அதிகம். இருவர் ஜாதகத்திலும் நன்மை தரும் தசை ஒருசேர வருவது போலும் தீமை தரும் தசை வரும் காலங்க ளில் ஒருவருக்கு வரும் தீமை மற்றவரின் தசையால் சரிசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • 7மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.
    • திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி, தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 25). இவருக்கு கடந்த, 7மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் கணவன் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதனையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வந்தனர். இருந்த போதிலும் அவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளை காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • மாணவி வாலிபர் ஒருவருடன் கரூரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள கல்லூரியில் 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மகளைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் கரூரில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். அவருடன் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் மாணவி வீட்டின் அருகில் வசிக்கும் ஒர்க் ஷாப் தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் கோபாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • காளிதாஸ் செக் குடியரசு நாட்டில் வேலைபார்த்து வந்தார்.
    • காளிதாஸ் செக் குடியரசு நாட்டில் வேலைபார்த்து வந்தார்.

    ராமேசுவரம் :

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர், காளிதாஸ் (வயது 30). இவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    காளிதாஸ் செக் குடியரசு நாட்டில் வேலைபார்த்து வந்தார். கொரோனா காரணமாக ஊருக்கு வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும், செக்குடியரசு நாட்டை சேர்ந்த ஹானா பொம்குலோவா என்ற பெண்ணுக்கும் இணையதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலமே இருவரும் காதலித்து வந்தனர்.

    இதற்கிடையே ஹானாவை, தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள காளிதாஸ் விரும்பினார். தனது வீட்டில் அதுபற்றி தெரிவித்து சம்மதமும் வாங்கினார். ஏற்கனவே இந்திய கலாசாரத்தை பற்றி அறிந்திருந்த ஹானாவும் தனது காதலரை கரம்பிடிக்க தமிழகத்துக்கு வந்தார்.

    இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் ராமேசுவரத்தில், ராமநாதசாமி கோவிலோடு சேர்ந்த உப கோவிலான பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்றது. பின்னர் மணமக்கள் ராமநாத சாமி கோவிலிலும் தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து காளிதாஸ் கூறும்போது, "செக் குடியரசு பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு 2 பேரும் மீண்டும் செக்குடியரசு நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளோம்" என்றார்.

    • 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
    • ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (25), கூலி தொழிலாளி. இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து பாலு, அவரது தந்தை பாக்கியநாதன், தாய் மஞ்சுளா, உறவினர்கள் சங்கர், கோதை ஆகியோர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் ஏ.கே.ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது.
    • ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் ஏ.கே.ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 2021-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்தியாவின் இளம் பெண் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ஆர்யா ராஜேந்திரன், கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வான கோழிக்கோடு பாலுச்சேரி எம்.எல்.ஏ. சச்சின் தேவ் (28) ஆகியோர் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து, அதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தனர். இருவரும் கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில் நேற்று ஆர்யா ராஜேந்திரன்-சச்சின்தேவ் திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. மையத்தில் எளிமையாக நடந்தது. இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கு பரிசு எதுவும் கொண்டு வர வேண்டாம் என்று மணமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். மேலும் அதை மீறி வழங்க விரும்புபவர்கள் முதியோர் இல்லத்திலோ, மாநகராட்சிக்கோ அல்லது முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கோ வழங்கலாம் என்று அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×