என் மலர்
நீங்கள் தேடியது "tag 95934"
சிதம்பரம் அருகே பள்ளிப்படை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ந்தேதி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த மனைவி ஜெயஸ்ரீ (வயது 23) மற்றும் 3 வயது மகள் லக்ஷனா ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகள், மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்- மகள் என்ன ஆனார்கள், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூடங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (65). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.58 ஆயிரத்துடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவரது மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவல்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரது பேரன் கவுதம் (17). 10-ம் வகுப்பு படித்து முடித்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது பெண் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகள் மொட்டையம்மாள் (26). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மொட்டையம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின்போது பல ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.
மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் போதும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள்.
தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணமாக காணிக்கை செலுத்தப்படும். சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாகூர் தேவசம் போர்டு இந்த காணிக்கைகளை எண்ணி தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாத்து வருகிறது. ஆரன்முளா கோவிலையொட்டி உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் இந்த பாதுகாப்பு அறை உள்ளது.
தேவசம் போர்டு உதவி கணக்கு அதிகாரியின் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பாதுகாப்பு அறைக்கு பொறுப்பு ஆகும். இந்த அறையை திறந்து காணிக்கை பொருட்களை வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்றால் 3 அதிகாரிகளும் இருந்தால் மட்டுமே முடியும். மேலும் ஆண்டுதோறும் பாதுகாப்பு அறையில் உள்ள காணிக்கை பொருட்களின் விவரங்களும் தணிக்கை செய்யப்படும்.
இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்த பொருட்களையும், அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து அதை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு பாதுகாப்பு அறையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் பொருட்களின் விவரம் பற்றி உடனடியாக ஆய்வு செய்யும் படி தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று தங்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஆய்வை முடித்த பிறகு அது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது தான் சபரிமலையில் காணிக்கையாக கிடைத்த விலை உயர்ந்த பொருட்கள் எவ்வளவு மாயமாகி உள்ளது என்பது பற்றி தெரிய வரும்.
இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
சபரிமலை கோவில் காணிக்கை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அறைக்கு தேவசம்போர்டு உதவி கணக்கு அதிகாரி தலைமையிலான 3 அதிகாரிகள்தான் பொறுப்பு. அதில் எந்த அதிகாரி மாறிச் சென்றாலும் புதிதாக வரும் அதிகாரியிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த 6 வருடங்களாக கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கத்தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தங்கம், வெள்ளி போன்ற எந்த காணிக்கை பொருட்களும் மாயமாகவில்லை. இது சிலரின் திட்டமிட்ட சதி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் கூறும்போது சபரிமலை கோவிலுக்கு 2017-ம் ஆண்டு முதல் காணிக்கையாக வழங்கப்பட்ட 40 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி மாயமானதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி தெரிந்து கொள்ள பக்தர்களுக்கு உரிமை உண்டு. தேவசம் போர்டு மந்திரி இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
பொன்னேரியை அடுத்த மாலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் நந்தினி (19). ரெட்ஹில்ஸ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நந்தினியை தேடி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் செல்லம்மாள் (வயது16). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று செல்லம்மாள் தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் பார்த்தனர். எங்கு தேடியும் காணாததால் அவரது தந்தை பெருமாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் யாரேனும் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும்? என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே முத்தையாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது 40). சுமதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மகள் ரூபா (வயது 25). தனது தாய் சுமதியை ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு ஊருக்கு போகிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை ரூபா வீட்டுக்கு செல்லவில்லை.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாவை தேடி வருகின்றனர்.