என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » taliban militants killed
நீங்கள் தேடியது "taliban militants killed"
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி, குன்டுஸ், உருக்ஸான் மற்றும் லோகர் மாகாணங்களில் விமானப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 42 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகர், கஸ்னி மற்றும் குன்டுஸ் மாகாணங்களில் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
விமானப்படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் 16 பேர், குன்டுஸ் மாகாணத்தில் 15 பேர், நாட்டின் தென்பகுதியில் உள்ள உருக்ஸான் மற்றும் ஸாபுல் மாகாணத்தில் 9 பேர், லோகார் மாகாணத்தில் இருவர் என 42 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் நகரை கைப்பற்றும் முயற்சியை முறியடித்த ராணுவத்தினர், 37 போராளிகளை சுட்டுக் கொன்றனர். #TalibanMilitants #MilitantsKilled #EasternAfghan
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை குன்டுஸ் நகரின் வடக்கு பகுதியை சுற்றி வளைத்து தலிபான்கள் கைப்பற்ற முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சோதனை சாவடிகளின் அருகே இருதரப்பினருக்கும் இடையில் இன்று பிற்பகல் வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தலிபான்கள் பின்வாங்கி சென்றதால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக குன்டுஸ் மாகாண காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நாட்டின் கிழக்கு பகுதியில் நன்கார்ஹர் மாகாணத்திற்குட்பட்ட ஷிர்ஸாத் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த வந்த தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் நேற்று பின்னிரவு நடந்த மோதல்களில் 27 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நன்கார்ஹர் மாகாண கவர்னர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #TalibanMilitants #MilitantsKilled #EasternAfghan

இந்த மோதலில் பத்துக்கும் அதிகமான தலிபான்கள் மற்றும் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டர்.
இதேபோல், நாட்டின் கிழக்கு பகுதியில் நன்கார்ஹர் மாகாணத்திற்குட்பட்ட ஷிர்ஸாத் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த வந்த தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் நேற்று பின்னிரவு நடந்த மோதல்களில் 27 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நன்கார்ஹர் மாகாண கவர்னர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #TalibanMilitants #MilitantsKilled #EasternAfghan
×

X