என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » talk
நீங்கள் தேடியது "talk. அமெரிக்க வெளியுறவு மந்திரி"
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அங்கு நீதிபதி நசிருல் முல்க் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று, நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
இந்த தருணத்தில், அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு தரப்பு உறவுகள் பற்றி மைக் பாம்பியோவுடன் கமர் ஜாவத் பஜ்வா விவாதித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் பேசினர் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த சந்திப்பு பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்து உள்ள டுவிட்டர் பதிவில், “தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை எந்த பாரபட்சமும் இன்றி இலக்கு வைத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவுடன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ விவாதித்தார்” என கூறப்பட்டு உள்ளது. #Tamilnews

×

X