search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu assembly"

    வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalanisamy #AIADMK
    சென்னை:

    வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவை ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்’ வாயிலாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்களை’ வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘எச்.டி.’ டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் தொடங்கி வைத்தார்.

    தற்போது ‘எஸ்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ‘எச்.டி’ ஒளிபரப்பு சேவை உயர்சந்தை தேவையை பூர்த்தி செய்வதால், இச்சேவையை விரும்பும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ குறைந்த விலையான ரூ.500-க்கு உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள எச்.டி. ஒளிபரப்பு சேவையில், மூன்றாவது தொகுப்பாக 380 ‘எஸ்.டி.’ சேனல்களுடன், 45 ‘எச்.டி.’ சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து மாத கட்டணத்தில் வசூலிக்கப்படும்.

    இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதிய செல்போன் செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு துறைகள் முதல் உள்ளாட்சி துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இந்த செயலி வழங்கும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும்.

    பொதுமக்களுக்கான அரசு துறைகளின் 63 சேவைகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் எளிதில் விண்ணப்பித்து பெற முடியும். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en என்ற திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பொதுமக்களுக்கான திறந்தநிலை சேவை தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EdappadiPalanisamy #AIADMK
    2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.
    சென்னை:

    2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இடையில், ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

    அதன்பிறகு, ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது.

    கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி சட்டசபையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அன்றைய தினம் விவாதம் நடைபெற்று முடியவே அதிக நேரமானதால், அமைச்சர்களின் பதிலுரை ஒத்திவைக்கப்பட்டது.

    எனவே, இன்றைக்கு கூட்டம் தொடங்கியதும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோரின் பதிலுரை இடம்பெறுகிறது. கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படாது. அமைச்சர்களின் பதிலுரை முடிந்ததும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

    இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக, தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர். 
    வங்கி கடனுக்காக சொத்துகளை பிணயமாக வைத்து பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்து பேசியதைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம்; வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் வணிகவரி அலுவலகம் கட்டப்படும். மதுரை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக் கட்டிடத்தில் மூன்று மின்தூக்கிகள் நிறுவப்படும்.

    பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும். தென்காசி பதிவு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும்.

    வங்கி கடனுக்காக சொத்துகளை பிணயமாக வைத்து பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும். கடனுக்காக சொத்துகளின் மூல ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து உடன்படிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.

    அந்த உடன்படிக்கைகளுக்கு மூன்றுமாத காலத்திற்குட்பட்டு அல்லது அதற்கு மேற்பட்டு என இரண்டுவித முத்திரைத் தீர்வை விதிக்கப்படுகிறது. அந்த முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.30 ஆயிரமாகவும், பதிவு கட்டணம் ரூ.6 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். #TNAssembly
    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #DMK #MKStalin #TNAssembly
    சட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளில் வரும் ஒரு செய்தி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று. நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை?” என்றார்.

    அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. மத்திய அரசும் அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. மத்திய மந்திரி சபை கூட்டத்தில்தான் அதற்கான நிதி ஒதுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 5 நிபந்தனைகளை விதித்தது. அந்த 5 நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, செய்துதர இசைந்துள்ளது. ரூ.1,500 கோடியில் 750 படுக்கை வசதியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி” என்றார். #DMK #MKStalin #TNAssembly
    காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால், புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

    அப்போது அவர், “முதல்-அமைச்சர் தனது பதிலுரையில் திட்டங்களை பற்றி கூறும்போது முடியும்.. முடியும்.. என்று கூறினார். முடிந்தது.. முடிந்தது.. என்று கூறியிருந்தால் நாங்களும் வரவேற்றிருப்போம். தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் இங்கே குறிப்பிட்டார். நான் நேற்று பேசும்போது, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையை வைத்துத்தான் பேசினேன். முதலில், புகார் மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். ஏனென்றால், காவல் நிலையங்களில் புகார் அளிக்க சென்றால், வழக்கு பதிவு செய்ய மறுக்கிறார்கள். நீதிமன்றம் சென்று வழக்குப்பதிவு செய்யும் நிலை உள்ளது. எனவே, இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவிக்க வேண்டும். புகாரின் மீது வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்.) செய்ய போலீசார் மறுத்தால், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்த பிறகு, குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தது என்று சொன்னால், நாங்களும் வரவேற்போம்” என்றார்.



    அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இப்போது காவல் நிலையம் சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. ஆன்லைன் மூலமே புகார் அளிக்கலாம். அந்த வகையில் அதிக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். #DMK #MKStalin #TNAssembly
    மதவெறி என்ற விஷ விதையை சட்டசபையில் விதைக்க வேண்டாம் என்று தி.மு.க.வுக்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். #OPanneerselvam #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    மு.க.ஸ்டாலின்:- இந்த மண்ணில் மதவெறி சக்திகளுக்கு நிச்சயமாக இடமில்லை. தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, பெரியார், அண்ணா பிறந்த மண்ணில் நாம் மத சார்பற்ற சக்திகளை மட்டுமே ஊக்கப்படுத்தி இருக்கிறோம்.

    ஆனால், சமீப காலங்களில் மதவெறி பிடித்த சக்திகளுக்கு இடமளிக்க கூடிய வகையில் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- மதவெறிக்கு இந்த அரசு ஆதரவு என்று கூறி விஷவிதையை விதைக்காதீர்கள். அது நாட்டுக்குக் கேடு. அதிக ஆண்டுகள் தி.மு.க.தான் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஆட்சி இது. எப்போது நாங்கள் மதவெறி சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம்.

    இதுபோன்ற போர்வைகளை எல்லாம் எங்கள் மீது போர்த்த வேண்டாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இதுபோன்ற போர்வைகளை எல்லாம் கிழித்து சுக்கு நூறாக்கி இருக்கிறார்கள்.

    மத்திய அரசில் நாங்கள் அங்கம் வைத்தோம். ஒரே ஆண்டில் கொள்கை முடிவு எடுத்து ஆதரவை விலக்கினோம். ஆனால் நீங்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வைத்தீர்கள்.



    துரைமுருகன்:- நன்றாக முடிவு எடுத்தீங்க. கரசேவைக்கு போய் கல்லு எடுத்து கொடுத்தீங்க.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்றால் யாரிடம் வேண்டுமாலும் போய் சேர்ந்துகொள்கிறீர்கள். அப்போது மதவாதம் தெரியவில்லை. 5 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். உங்கள் மத்திய மந்திரி ஓராண்டு காலம் நினைவில்லாமல் இருந்தாலும், அவரை மந்திரியாக வைத்திருந்தனர். அன்றைக்கு மதவாதம் தெரியவில்லையா. இன்றைக்கு மதவாதம் தெரியுதா? எங்களை பொருத்தவரை ஒரே நிலையில் இருக்கிறோம்.

    மு.க.ஸ்டாலின்:- சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தையும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ்நாட்டு மண். ஆனால், திராவிட இயக்கம் கட்டிக் காத்த மதசார்பற்ற தன்மை மத நல்லிணக்கம் சென்றுவிட்டால் அது நிச்சயம் திரும்ப வராது அது இந்த மண்ணிற்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் நாம் திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை, தன்மானத்தை இழந்துவிடக் கூடாது.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #OPanneerselvam #TNAssembly
    மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.#TNAssembly
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 8-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெற்றது. அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ந் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது.

    அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கும் முதல் நாளில்  வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க இருக்கின்றனர்.

    தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ந் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார்.

    இடையில், ஜூன் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையையும் எழுப்ப இருக்கிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், தினமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.#TNAssembly
    தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினையை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #TamilnaduAssembly
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 8-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெற்றது.

    அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ந் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது.

    அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

    இந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கும் முதல் நாளில் (நாளை) வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க இருக்கின்றனர்.

    தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ந் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார்.

    இடையில், ஜூன் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையையும் எழுப்ப இருக்கிறது.

    எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், தினமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.   #TamilnaduAssembly
    ×