search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil nadu Cabinet meeting"

    • அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
    • 500 கடைகளை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ந்தேதி மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி நியமனத்தை தொடர்ந்து அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டது.

    இந்த மாற்றத்தின் போது அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கா.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டனர். செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    அப்போது பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் அனுமதிகள், சலுகைகள் குறித்து விவா தித்து இறுதி முடிவு செய் யப்படும். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள நிலையில் புதிய நிறுவனங்களின் அனுமதி பற்றி கொள்கை முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 4829 மதுக்கடைகளில் 500 கடைகளை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalanisamy #CabinetMeeting
    சென்னை:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

    அதன்பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

    அதன் அடிப்படையில் தமிழக அரசு குறிப்பிட்டு தந்த 5 இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் உயர்மட்டக்குழுவினர் வந்தனர். அவர்களும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கினார்கள்.



    இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.

    இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அத்தனை உதவிகளையும் செய்யும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. #EdappadiPalanisamy #CabinetMeeting
    ×