search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu police"

    • தமிழக காவல்துறையில் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் காவல்துறையின் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்வியும் ஒரு காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பி சமய் சிங் மீனா, மதுராந்தகம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி கிரண் ஸ்ருதி, பவானி சப்-டிவிஷன் ஏஎஸ்பி தீபக் சிவாச், கோட்டக்குப்பம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், திருத்தணி சப்-டிவிஷன் ஏஎஸ்பி சாய் பிரனீத் ஆகியோர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    சென்னை பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாகவும், சென்னை வடக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், பூக்கடை துணை கமிஷனராகவும், ஆவடி டிஎஸ்பி-வி பட்டாலியன் எஸ்பி ராதாகிருஷ்ணன் சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும், எஸ்.பி. கண்ணன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.

    குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. #PresidentAward #TNPolice #CentralGovernment
    சென்னை:

    குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

    தகைசால் பணிக்காக திருச்சி சிறப்பு புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பி.கோவிந்தசாமியும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இ.சொரிமுத்துவும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

    பாராட்டத்தக்க பணிக்காக 21 பேர் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1. மகேஸ்வரி - தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர்

    2. காமினி - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.

    3. சாந்தி - போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை

    4. அசோக்குமார் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம், சென்னை

    5. ராஜேந்திரன் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சிறப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை

    6. கேசவன் - துணை போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

    கனகராஜ் ஜோசப்

    7. தேவராஜ் - சென்னை பல்லாவரம் உதவி போலீஸ்

    கமிஷனர்

    8. வெற்றிச்செழியன் - போலீஸ் உதவி கமிஷனர், திருவல்லிக்கேணி, சென்னை

    9. கனகராஜ் ஜோசப் - சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்

    10. சங்கர் - துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை

    11. ஆறுமுகம் - உதவி தளவாய், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 3-ம் அணி, ஆவடி

    12. சங்கரசுப்பிரமணியன் - இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை

    13. ஜான் விக்டர் - போலீஸ் இன்ஸ்பெக்டர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பொன்னேரி

    14. கணேசன் - போலீஸ் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, காஞ்சீபுரம்

    சப்-இன்ஸ்பெக்டர்கள்

    15. ஜனார்த்தனன் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

    16. உலகநாதன் - சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பாதுகாப்புபிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை.

    17. முத்துராமலிங்கம் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, ராமநாதபுரம்

    18. சீனிவாசன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

    19. குணாளன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு தலைமையிடம் சென்னை

    20. புருஷோத்தமன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

    21. பாஸ்கரன் - போலீஸ் ஏட்டு, சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.#PresidentAward #TNPolice #CentralGovernment
    ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #CopKilled #TNPolice
    விசாகப்பட்டினம்:

    தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் நீலமேக அமரன். இவர் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார். வேம்பேடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.



    இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த தலைமைக் காவலர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #CopKilled #TNPolice

    சுதந்திர தின விழாவையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #IndependenceDay
    சென்னை:

    சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டுதோறும் தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா ஜனாதிபதி விருது பட்டியலை மத்திய அரசு நேற்று மாலை வெளியிட்டது.

    அந்த பட்டியலில் தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. எம்.என்.மஞ்சுநாதா-கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. காவலர் வீட்டு வசதி வாரியம். 2. கே.பி.சண்முகராஜேஸ்வரன்-தென் மண்டல ஐ.ஜி. மதுரை. 3. எஸ்.திருநாவுக்கரசு-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு துறை. 4. பி.விஜயகுமாரி-சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர். 5. எம்.பாண்டியன்-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டு. 6. எஸ்.ராஜேந்திரன்-சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர். 7. எஸ்.முத்துசாமி-சென்னை பரங்கிமலை துணை கமிஷனர். 8. பி.பகலவன்-சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர். 9. எ.முகமது அஸ்லாம்- துணை போலீஸ் சூப்பிரண்டு காஞ்சீபுரம் மாவட்டம். 10. ஆர்.விஜயராகவன்-திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு. 11. எஸ்.ஆனந்தகுமார்-கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு. 12. டி.பாலமுருகன்-சென்னை கடலோர காவல் குழும துணை சூப்பிரண்டு. 13. டி.சேகர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை சூப்பிரண்டு. 14. எம்.குமரகுருபரன்-சென்னை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு. 15. ஐ.சுப்பையா-நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

    16. கே.ராமச்சந்திரன்-திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு. 17. எஸ்.முத்துவேல் பாண்டி- சென்னை நுங்கம்பாக்கம், உதவி கமிஷனர். 18. பி.ஸ்டீபன்-சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். 19. ஜி.தேவராஜ்-பெரம்பலூர் இன்ஸ்பெக்டர். 20. எ.அண்ணாமலை-சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர். 21. பி.ராஜாராம்-சென்னை பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர். 22. கே.பி.லாரன்ஸ்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், மாநில உளவுப்பிரிவு, சென்னை. 23. இ.முனுசாமி-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 24. எஸ்.ஜெ.உமேஷ்-தலைமை காவலர், மாநில உளவுப்பிரிவு, சென்னை. 25. எஸ்.ஜஸ்டின் ராஜ்-துணை போலீஸ் சூப்பிரண்டு. எஸ்.சி., எஸ்.டி. கண்காணிப்பு பிரிவு, மதுரை.

    தமிழக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மதியழகன் தீத்தன், தனசேகரன் சிகாமணி, டிரைவர் வெள்ளச்சாமி சுப்பிரமணியன், தீயணைக்கும் படை வீரர் செல்வமணி ஞானகண்ணு ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். 
    சென்னையில் ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் 89 இடங்களில் 20 ஆயிரம் போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். #EdappadiPalanisamy #blooddonation
    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் சுமார் 4 லட்சம் யூனிட் ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    மீதமுள்ள 4 லட்சம் யூனிட் ரத்தம் தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் யூனிட் வரை தேவைப்படுகிற ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதம் கல்லூரி விடுமுறை என்பதால் கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைகிறது.

    இதனால் ஜூன் மாதத்தில் ரத்தத்தின் தேவை அதிகரிக்கிறது. எனவே ஜூன் மாதத்தில் போலீசாரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 89 இடங்களில் 20 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்தனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த போலீசாரின் ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இந்த மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன் னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) விஜய குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், காவல் துறை கூடுதல் இயக்குநர் (பயிற்சி) ஆர்.சி. குடவாலா, காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) முகமது ‌ஷகில் அக்தர், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



    புதுடெல்லியில் 26-ந்தேதி நடைபெற்ற “பாஸ்போர்ட் சேவா திவஸ்” விழாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் எம்-போலீஸ் ஆப் செயலியை உருவாக்கிய தமிழ்நாடு காவல்துறையின் பணியை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறைக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியால் வழங்கப்பட்ட சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்பம்) மஞ்சுநாதா, காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு முகாம்களில் 20 ஆயிரம் போலீசாரும் ரத்த தானம் செய்தனர். ஒவ்வொருவரிடம் இருந்தும் 1 யூனிட் என மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. 89 ரத்த வங்கிகளில் அவை பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டன.

    இந்த ரத்தம் ஏழை-எளியவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.#EdappadiPalanisamy #blooddonation
    பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மதுரை வாலிபர் யார் - யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை உறுதி படுத்துவதற்காக தமிழக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    புதுடெல்லி:

    மதுரையைச் சேர்ந்தவர் முகம்மது ரஷீத். 40 வயதாகும் இவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து விடும் துரோகச் செயலை அவர் செய்து வந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு அவர் பணம் திரட்டி கொடுப்பதாகவும் கூறப்பட்டது. பிரான்சில் கடந்த 2013-ம் ஆண்டு 2 பேரை மூளை சலவை செய்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

    அவரை பிரான்சு போலீசார் கைது செய்தனர். அவருக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பாரிசீல் உள்ள ஜெயிலில் அவர் தண்டனையை அனுபவித்து வந்தார்.

    முகம்மது ரஷித் தென் இநதியாவில் இருந்து நிறைய பேரை மூளைச் சலவை செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருப்பதாக சந்தேகம் நிலவுகிறது. இதையடுத்து கூடுதல் விசாரணைக்காக அவரை ஒப்படைக்கும்படி பிரான்சிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.

    அதன் பேரில் பிரான்சு அரசாங்கம் கடந்த வாரம் முகம்மது ரஷீத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    பிறகு முகம்மது ரஷீத் தேசிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்தியாவில் இருந்தும், பிரான்சில் இருந்தும் மத்திய கிழக்கு நாட்களுக்கு அவர் அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

    இது தவிர இந்தோனேசியாவில் பாலித்தீவில் 202 பேர் பலியான 2002-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கும் முகம்மது ரஷீத்துக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான விசாரணையும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் முகம்மது ரஷீத் தமிழ்நாட்டில் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தற்போது தமிழ்நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். #tamilnews

    ×