search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Slum Clearance Board"

    • வீடு திட்டத்தின்கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
    • இடைத்தரகர்களாக செயல்படும் பலரும் வீடு வாங்கித்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்வது தொடர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் அதன்பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் உள்பட புறநகரங்களில் சமீப காலமாக குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் வீடு வாங்கி தருவதாக பல கும்பல்கள் களத்தில் இறங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் வீடுதிட்டத்தின்கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கிடையே, இடைத்தரகர்களாகச் செயல்படும் பலரும் வீடு வாங்கித்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடிசெய்வது தொடர்ந்து வருகிறது. பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதுபோல் ஏமாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக பணம் கேட்டு ஏமாற்றும் இடைத்தரகர்களை நம்பி ஏமாறவேண்டாமென பொது மக்களிடம் தொடர்ந்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். குடிசை மாற்று வாரியத்தில்வீடு வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்தவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டுமெனவும், அனைத்து பொது தொழிலாளர் நலஅமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

    ×