search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilaga Vettri Kazhagam"

    • சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார்.

     

    சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

     

    இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

    இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய அம்மா ஷோபா வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில்,

    'இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று.

    பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)' என கூறி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.
    • ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    சென்னை:

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.

    * தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன்.

    * தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.

    * தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.

    * ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    * என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்.

    * நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.

    * தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
    • தவெக கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.

    கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் துவத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வெளியாகி உள்ளது. அதில்,

    நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

    நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

    சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
    • பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம்  நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார்.

    மாநாட்டுக்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.

    கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார்.

    இந்த நிலையில், கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார். காலை 9.15 மணிக்கு கொடியை ஏற்றி வைக்கிறார்.

    • நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!
    • எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்!

    சென்னை:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!

    எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்! நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்!

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது.
    • மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது.

    இதையொட்டி கட்சியின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பற்றியும் கட்சித் தலைவர் விஜய் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனைகளை செயல்படுத்தி வருகிறார்.

    விஜய்யின் ஒவ்வொரு அறிவிப்பும் கட்சி தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி பிரபல அரசியல் கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்துவதற்கு விஜய் திட்ட மிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாநாடு நடத்து வதற்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய இடங்களை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொண்டர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


    திருச்சியில் மாநாடு நடத்துவது அனைத்து மாவட்டத்தினருக்கும் பொதுவாக இருப்பதால் பெரும்பாலான தொண்டர்கள் திருச்சியில் மாநாடு நடத்த வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து திருச்சி ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

    மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 'சாலை' என்ற ஊரில் பல ஏக்கர் பரப்பளவில் காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதையொட்டி மாநாடு மைதானத்தை கட்சி முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.
    • விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார்களை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார். விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

    விஜய் அரசியல் கட்சி தொடங்கி அறிக்கை மற்றும் வாழ்த்து செய்தி மட்டும் வெளியிட்டு வந்த நிலையில் நேற்று நேரிடையாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றது அவர் அரசியல் பணியில் முழு வீச்சில் உள்ளார் என்பதையே காட்டுகிறது.


    இந்நிலையில், நாளை 50-வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.


    • உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    • இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளச்சாராய பலி அரசு நிர்வாகத்தில் அலட்சியம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

    இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்
    • உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    சென்னை :

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
    • 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜய் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்.

    இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தனது கையால் பரிசு வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டும் அதற்கான விழா வருகிற 28-ந் தேதியும், அடுத்த மாதம் 3-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    விஜயின் இந்த உதவி மற்றும் பாராட்டு எதிர்கால இளம் வாக்காளர்களாகிய மாணவ-மாணவிகளின் மத்தியிலும், அவர்களது பெற்றோர்களின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் பலரும் விஜயின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


    தமிழக அரசியல் களத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் உள்ளன.

    இந்த 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது. இந்த அணிகளுக்கெல்லாம் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லட்சக்கணக்கான ரசிகர்கள், பெண்கள் மற்றும் பொதுவான வாக்காளர்கள் என பலதரப்பட்டவர்களும் விஜயின் அரசியல் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    இதுவே வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதுபோன்ற வாக்காளர்களால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 20 சதவீதம் அளவுக்கு வாக்குகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் விஜய் கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் விஜய்யும், சீமானும் ஒன்று சேர்ந்து தேர்தலில் சந்தித்தால் அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இப்படி தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது நிச்சயம் திராவிட கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய கூட்டணியாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 28 சதவீத வாக்குகளை பெற்று இந்த புதிய கூட்டணி ஆட்சியை கைப்பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் அரசியல் களத்துக்கு புதியவர்கள். இதனால் அனுபவம் வாய்ந்த பலரையும் விஜய் தனது அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சீமானின் அரசியல் அனுபவம் விஜயின் தேர்தல் வெற்றிக்கு நிச்சயம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. பெரிதும் விரும்பியது. ஆனால் சீமான் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ள விஜய் புதியவர்களோடு சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

    எனவே விஜயுடனான கூட்டணி என்பதில் சீமானுக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தாது என்பதே நாம் தமிழர் கட்சியினரின் கருத்தாக உள்ளது.

    இப்படி இருவரும் கைகோர்த்தால் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்படத் தொடங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார்.
    • மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 28-ந்தேதி மற்றும் ஜூலை 3-ந்தேதிகளில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழை விஜய் வழங்குகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.

    முதல் கட்டமாக வருகிற 28-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

    சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    ×