search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu Kerala border"

    • தமிழக வனப்பகுதியை கேரளா அபகரிக்கும் சூழல் உள்ளதாக விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழக எல்லையில் சுமார் 500 மீட்டர் வரையாவது வருவாய் நிலங்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும்.

    கூடலூர்:

    நீண்டகாலமாக எல்லையை அளவீடு செய்வதில் இழுபறி நீடிப்பதால் தமிழக வனப்பகுதியை கேரளா அபகரிக்கும் சூழல் உள்ளதாக விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில பிரிவினைக்கு பின்னர் கேரளஅரசு தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு மக்களை குடியேற வைத்தது. தமிழக எல்லை வனப்பகுதியாகவும், கேரள எல்லை வருவாய் நிலமாகவும் இருப்பதால் அவர்களுக்கு ஆக்கிரமிப்பு செய்ய எளிதாக போய்விட்டது. 2014-ம் ஆண்டு மே மாதம் உடும்பன்சோலை தாலுகா புஷ்பகண்டம் பகுதியில் தமிழக வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் என தமிழக வனத்துறை முதன்மை பாதுகாவலர் உடும்பன்சோலை தாசில்தாருக்கு எழுதிய கடிதத்தை இன்றுவரை கிடப்பில் போட்டுள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு கம்பம்மெட்டு பகுதியில் கண்டெய்னர் அலுவலகத்தை வைத்தனர். இதை தட்டிகேட்ட தமிழக வனத்துறைக்கும், கம்பம் மெட்டு, கேரள போலீசாருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தேனி, இடுக்கி மாவட்ட அதிகாரிகள் சமரசம் செய்து இருமாவட்ட எல்லையை அளவீடு செய்வது என முடிவு செய்தனர்.

    தமிழகம் சார்பாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ, கேரளா சார்பில் தேவிகுளம் சப்-கலெக்டர் முன்னிலையில் கம்பம் மெட்டு அருகே உள்ள மண்டிபாறை நாவல்பள்ளத்தில் தொடங்கி கல்லுவேலி எஸ்டேட் வரை எல்லையை நிர்ணயம் செய்து 14 எல்லை கற்களையும் தமிழக வனத்துறை ஊன்றியது.

    முடிவில் கம்பம்மெட்டு சோதனைச்சாவடிக்கு வந்து இருமாநில அதிகாரிகளும் எல்லையை அளவீடு செய்யும் போது கம்பம்மெட்டில் இருக்கும் கேரளகாவல்துறை சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் இருப்பது தெரியவந்ததும் கேரள அதிகாரிகள் பின்வாங்கினர். அடுத்தநாளே இடுக்கி எம்.பி முன்னிலையில் அவரது ஆதரவாளர்கள் தமிழக வனத்துறை ஊன்றிய எல்லைகற்களை பிடுங்கி அகற்றினர். அப்போது முதல்வராக இருந்த உம்மன்சாண்டி எல்லைப்பகுதிக்கு வந்து இதனை ஆய்வுசெய்து சென்றார். அப்போது தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த உதயகுமார் கம்பம்மெட்டு அடிவாரம் மட்டுமே சென்று திரும்பிவிட்டார்.

    இதுபோல இருமாவட்ட எல்லைபிரச்சினை நீண்டகாலமாக அளவீடு செய்யாமல் கிடப்பில் உள்ளதால் தமிழக வனப்பகுதியை கேரளா கபளீகரம் செய்து வருகிறது. எனவே இனிமேலாவது தமிழக அதிகாரிகள் சுதாரித்து எல்லையை அளவீடு செய்ய முன்வரவேண்டும். தமிழக எல்லையில் சுமார் 500 மீட்டர் வரையாவது வருவாய் நிலங்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழக - கேரள எல்லையில் கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்தபோது மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.

    மாவோயிஸ்டுகள் அடிக்கடி ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் போலீசார் மீது தாக்குதல், அரசு அலுவலங்ககளை தாக்குவது, வன ஊழியர்களை பிடித்துச்செல்வதுமாக இருந்தனர். அவர்கள் நவீன ரக துப்பாக்கியுடன் போலீசுடன் மோதி வந்தனர்.

    இந்நிலையில் கொரில்லா தாக்குதல் நடத்தப்போவதாக பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் மாவோயிஸ்டு தடுப்பு போலீசார், தண்டர்போல்டு போலீசார் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவோயிஸ்டு டேனியஸ் (வயது 30) என்பவர் அட்டப்பாடி அகழி பகுதியில் சுற்றித்திரிவதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுஜித் தாசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் இன்று காலை அகழியில் சுற்றித்திரிந்த டேனியசை கைது செய்தனர்.

    டேனியசிடம் விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் பாலக்காடு விரைந்துள்ளனர். கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்தபோது சிக்கினார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு டேனியஸ் கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் என்றும், கொரில்லா தாக்குதலில் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்றும் அகழி போலீசார் கூறினர். #tamilnews
    ×