என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » targets
நீங்கள் தேடியது "targets"
ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிர்மலா சீதாராமன் மீது குற்றம் சாட்டியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #RahulGanthi
புதுடெல்லி:
ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் 20-ந் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்று பேசியபோதும், “ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் பிரதமரிடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் உண்மையைப் பேசவில்லை” என்று சாடினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். திரும்பவும் ரபேல் போர் விமான பேர பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்.
அதில் அவர், “நமது ராணுவ மந்திரி ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் ரகசியம் ஏதும் இல்லை. அதை சொல்வேன் என்றார். ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்கிறார். இதில் ரகசியம் இல்லை என்று சொல்லி விட்டு இது மிகப்பெரிய ரகசியம் என்று நிலை மாற்றி பேசுகிறார். ரபேல் போர் விமானத்தின் விலை பற்றி நான் கேட்டால் பிரதமர் நெளிகிறார். என்னை நேருக்கு நேர் பார்க்க மறுக்கிறார். இதில் நிச்சயம் ஊழல் நடந்து உள்ளது” என்று கூறி உள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #tamilnews

×

X