search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tax payers"

    • வருமான வரி தணிக்கை அறிக்கையில் பிரிவு 16 மற்றும் 44ல் தேவையான திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.
    • டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., வரி படிவங்களை எளிய முறையில் மாற்ற வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் வரும் 2023ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு நிதித்துறைக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது :- நடப்பு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான வருமான வரம்பு அளவுகோலை கருத்தில் கொண்டு வருமான வரி விதிப்பில்ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்து வருமானவரி சதவீதத்தை குறைக்கவும், வருமான வரி தணிக்கை அறிக்கையில் பிரிவு 16 மற்றும் 44ல் தேவையான திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர், கணக்கு புத்தகங்கள் சரியான முறையில் பராமரிக்க வழிவகுக்கும் சட்டப்பிரிவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் சிறு தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு உரிய விலக்கு அளிக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் கீழ் படிவம் தாக்கல் செய்யும் காலவரம்பை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றி அமைக்க மாத ஊதியம் பெறுவோருக்கு ஜூன் 30 எனவும், வணிகம் செய்பவர்களுக்கு ஆகஸ்டு 1 எனவும், தணிக்கை செய்ய வேண்டிய வணிகர்களுக்கு செப்டம்பர் 30 எனவும் பதிவு செய்யப்பட்ட கம்பெனி மற்றும் அறக்கட்டளைகளுக்கு அக்டோபர் 31 எனவும் நிர்ணயித்தால் கம்ப்யூட்டர் வாயிலாக ஒரே நேரத்தில் படிவம் தாக்கல் செய்வது தவிர்க்கப்படும்.

    நிறுவனம் செலுத்த வேண்டிய டி.டி.எஸ்., மற்றும் டி.சி.எஸ்., வரி படிவங்களை எளிய முறையில் மாற்ற வேண்டும். தனி நபர் வருமானம் ரூ.5 லட்சம் தாண்டியவுடன் குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரம் வரி கட்ட வேண்டி உள்ளது.முன்கூட்டி வரி செலுத்த வேண்டிய பிரிவின் கீழும் வட்டி கட்ட வேண்டியுள்ளது. தனிநபர் அதற்கு குறைவான வருமான வரி கட்டி படிவம் தாக்கல் செய்ய இயலாது. எனவே அந்த சட்டப்பிரிவில் தேவையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.சரக்கு மற்றும் சேவை வரிசட்டத்தில் (ஜி.எஸ்.டி.,)யில் தற்போது எழுந்துள்ள சிரமங்களை குறைக்கவும் சட்ட சச்சரவுகளை தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சமூக நலன் மேம்பாட்டிற்காக நேர்மையாக வரி செலுத்தும் பொதுமக்களுக்கு போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களில் 60 வயதுக்கு மேல் பென்ஷன் பெறுவதாக இருந்தால் அவர்கள் இதுவரை செலுத்திய வரிக்கு ஏற்ப பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்திய விவசாயத்தை உலக அளவில் கொண்டு செல்லவும், விவசாய பாடப்பிரிவை அனைத்து கலைக்கல்லூரிகளிலும் ஏற்படுத்த வேண்டும்.ஏழை, எளிய மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.600 விலை நிர்ணயிக்கவும், கியாஸ் மானியத்தை வங்கியில் செலுத்த வேண்டும்.

    இக்கோரிக்கைகள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உடுமலை தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    ×