என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » teachers eligibility test
நீங்கள் தேடியது "Teachers Eligibility Test"
தமிழ்நாட்டில் ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் (Teachers Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 28-2-2019 அன்று வெளியிட்டது.
www.trb.tn.nic.in என்ற தளத்தில் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைதளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதியில் இருந்து 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. 8-ம் தேதி முதல்தாள் மற்றும் 9-ம் தேதி இரண்டாம்தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2017ல் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டுக்கான (2018) தேர்வு நீதிமன்ற வழக்கு காரணமாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
×

X