search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Team selection"

    டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரர் கருண்நாயர், டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளார். #KarunNair #BCCI
    பெங்களூர்:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களில் 2 பேர் மட்டுமே டிரிபிள் செஞ்சூரி அடித்துள்ளனர். ஒருவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2 முறை டிரிபிள் செஞ்சூரி (319, 309) அடித்துள்ளார்.

    மற்றொருவர் கருண் நாயர். 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 303 ரன் குவித்து முத்திரை பதித்தார்.

    முச்சதம் அடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கருண்நாயர் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது. 26 வயதான அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் ஆடினார். அதற்கு பிறகு கடந்த 1½ ஆண்டுகளாக 11 பேர் கொண்ட அணியில் ஆடவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான அணியில் கருண்நாயர் இடம் பெற்று இருந்தார். ஆனால் ஒரு டெஸ்டில் கூட அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. கடைசி வரை பெஞ்சில் தான் இருந்தார்.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது கருண்நாயர் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் ஆடினேன். இதில் இரண்டு இன்னிங்சில் நான் சரியாக ஆடவில்லை. ஆனால் அதன்பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டமே. வாய்ப்பு கொடுக்காமல் நீக்கப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை.

    தேர்வு குழுவினரோ அல்லது அணி நிர்வாகமோ என்னிடம் எந்த தகவலையும் பரிமாறியது இல்லை. இது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனாலும் தேர்வு குழு ஒரு முடிவை எடுத்துவிட்டது. அதை நான் மதிக்கிறேன்.

    இவ்வாறு கருண்நாயர் கூறியுள்ளார். #INDvWI #karunnair #TeamIndia #BCCI
    ×