search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Technical Courses"

    • மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.
    • வயது வரம்பு தடை இல்லை.

    உடுமலை :

    ஆனைமலை ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 2023 - 24க்கான தொலைதூர கல்வி இயக்ககத்தின் தென்னை சாகுபடி தொழில்நுட்ப படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்னை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள், கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்று பயிற்சியில் சேரலாம்.6 மாத கால சான்றிதழ் படிப்பு பாடத்தில் மாதம் ஒரு நாள் தென்னையில் பயிர் இனப்பெருக்கம், ரகத்தேர்வு, பயிர் மேலாண்மை ஒருங்கிணைந்த பூச்சி - நோய் மேலாண்மை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

    தென்னை சார் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு தடை இல்லை. தமிழ் பேச, படிக்க தெரிந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். கல்வித்தகுதி தேவையில்லை. பயிற்சி கட்டணம் 2,560 ரூபாய்.ஓராண்டு பட்டய படிப்பில் மாதத்துக்கு இருநாட்கள் வகுப்புகள் நடைபெறும். இதில் செய்முறை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தென்னையில் ரகங்கள் தேர்வு, வீரிய ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி, தென்னை தாவரவியல், திசுவளர்ப்பு முறையில்தென்னங்கன்றுகள் உற்பத்தி, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஊட்டச்சத்து மேலாண்மை, வறட்சி மேலாண்மை, தென்னை கழிவுகள் வாயிலாக மண்புழு உர தயாரிப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, எதிர் உயிரி உற்பத்தி செய்து பூச்சி நோயை கட்டுப்படுத்துதல், அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள், தென்னையில் மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.பிளஸ்-2 தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு பருவங்களை கொண்ட ஓர் ஆண்டு படிப்பின் ஒரு பருவத்திற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாய்.

    இங்கு கற்போர், பாடப்பிரிவுகளில்பெறும் பயிற்சியின் வாயிலாக தங்கள் பண்ணைகளிலேயே தென்னையில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்து அதிக லாபம் ஈட்டலாம்.வகுப்புகள் முடிந்ததும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் சான்றிதழ் அளிக்கப்படும்.தென்னை வளர்ச்சி வாரியத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று தொழில் முனைவோராகலாம்.

    பயிற்சியில் சேர விரும்புவோர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தை நேரிலோ அல்லது 82486 99865, 98420 67785 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×