என் மலர்
நீங்கள் தேடியது "Teen"
- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பரளை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 26). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதாகவும், திருமணத்தின் போது பெற்றோர்கள் கொடுத்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை தர மறுக்கிறார் என்றும், அவரிடம் இருந்து தனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்தார்.
பின்னர் லட்சுமி திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தன் மீதும் தன் குழந்தை மதிவர்ஷிதா மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். போலீசார் பேரிகாட் அமைத்து நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை தன் மீதும் குழந்தை மீதும் தனக்குத்தானே ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் போலீஸ் சரகம் சேந்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பாப்பா (வயது57). இவர்களது மகன் தேவேந்திரபாண்டியன்(31). இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில் மது குடிக்க தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால் தேவேந்திர பாண்டியன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.
மதுரை
காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் திருமுருகன் (வயது23). இவர் அரசு வேலைக்காக 2 வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை கைது செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கிராமத்தை சேர்ந்த வர் அஸ்லாம் மனைவி அல் ஜாமைமா(36). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உசிலங் காட்டு வலசை கிராமத்தை சேர்ந்தவர் மருங்கப்பன் மகன் ராஜசேகர்(36), அவர் அல்ஜாமைமா வீட்டுக்கு சென்று உங்களது கணவர் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறினார். அந்த பணத்தை உடனே வட்டியு டன் கொடுக்க வேண்டும் என்று கூறி அவரை மிரட்டி வீட்டின் கதவை பூட்டினார். அவருடைய குழந்தைகள் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே விடுவிப்ப தாகவும் கூறியதாக தெரி கிறது.
இதையடுத்து அல்ஜாமை மா ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க ராஜிடம் புகார் அளித்தார். அவரது உத்திரவின் பேரில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.
- இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
- அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வெம்பகோட்டை அருகே உள்ள சிவலிங்கா புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது34). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு எனக்கும், தென்காசி மாவட்டம் குறிஞ்சா குளத்தை சேர்ந்த கார்த்தி கேயன்(43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் திடீரெ ன்று கணவர் விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்திடுமாறு வற்புறுத்தி யுள்ளார். இதற்கு மறுக்கவே, கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் மறுத்ததால் துன்புறுத்தி னார்.
இது தொடர்பான பிரச்சினையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மோகன்-கிருஷ்ணவேணி ஆகியோர் தகராறு செய்து எனக்கும் , என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு உத்த ரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசா ரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர்களுடன் விளையாட சென்றதால், வேலைக்கு தாமதமாக வந்தான்
- நியாயம் கேட்க சென்ற அனைவரையும் சீதாராம் அவமதித்து விரட்டியடித்தார்
மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கன் பகுதியில் உள்ளது பல்கார் நகரம்.
இங்குள்ள கம்லோலி கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திர சீதாராம் பாட்டில். இவர் தனது வீட்டில், வீட்டு வேலைகளை செய்வதற்கு ஒரு 13 வயது சிறுவனை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அந்த சிறுவனும் அதே கிராமத்தில் வசித்து வந்தான். பல வருடங்களுக்கு முன்பே அச்சிறுவனின் தாயார் இறந்து விட்டார். அவன் தந்தை காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்ப வறுமையை குறைக்க அவன் வேலைக்கு சென்றான்.
அவனுக்கு ராஜேந்திர சீதாராம் தனது வீட்டிலேயே தங்கும் வசதியுடன் மாத சம்பளமாக ரூ.1100 அளித்து வந்தார்.
மூன்று தினங்களுக்கு முன் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தை காண சென்ற அந்த சிறுவன் வரும் வழியில் அவனது நண்பர்களை கண்டதும் அவர்களுடன் விளையாட சென்றான். அதனால் ராஜேந்திராவின் வீட்டிற்கு வேலைக்கு வருவதற்கு தாமதமாகி விட்டது.
அவன் தாமதமாக வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர சீதாராம், அவனை சரமாரியாக அடித்தார். அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அச்சிறுவன் தனது தந்தையிடம் புகாரளித்தான். இதனையடுத்து அவன் தந்தையும், சில கிராமவாசிகளும் சீதாராமிடம் காரணம் கேட்க சென்றனர். ஆனால், அவர்களையும் ராஜேந்திர சீதாராம் தகாத வார்த்தைகளை கூறி விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல்துறையினரிடம் சென்று புகாரளித்தனர்.
விசாரித்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளில் சீதாராம் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரை இதுவரை கைது செய்யாத காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த காயங்களடைந்த அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
- திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சியாம் கணேசை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலபாலையத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது21). இவர் வத்திரா யிருப்பு போலீசில் புகார் அளித்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கார்மெண்டில் வேலை பார்த்து வந்தேன். அப் ேபாது தெற்கு தெருவை சேர்ந்த சியாம் கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. தன்னை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி சியாம்கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.
தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்ப டையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வ தாக கூறி இளம்பெண்ணை கற்பழித்த சியாம் கணேசை தேடி வருகின்றனர்.
- பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
- கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பொன்னேரி சின்ன கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி பிரியா (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.
இந்நிலையில் பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இத னால் பிரியா ஏற்கனவே பழகி வந்த கோபால கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்தார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பொன்னேரி அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கோபால கிருஷ்ணனை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கள்ளக்காதலியை அடையும் போட்டியில் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே புழல் அருகே காரில் தப்பி செல்ல முயன்ற பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரத்த கறைபடிந்த 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோபால கிருஷ்ணனுடன் உள்ள தொடர்பை பிரியா தவிர்த்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபால கிருஷ்ணன், பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதையடுத்து கோபால கிருஷ்ணனை தீர்த்துகட்ட முடிவு செய்த பிரியா இதுபற்றி தனது மற்றொரு கள்ளக்காதலனான ரவுடி ஆனந்தனிடம் கூறினார். அவரும் பிரியாவை அடையும் ஆசையில் கோபால கிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அவர்களது திட்டப்படி பிரியா, கள்ளக்காதலன் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் அரிவாள் கத்தியுடன் நேற்று இரவு கோபால கிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஆனால் கோபால கிருஷ்ணன் நண்பர்களை பார்க்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்றால் அங்கு சென்று அவரை தீர்த்து கட்டிவிட்டனர். கோபால கிருஷ்ணனை அரிவாளல் வெட்டி கொன்ற போது அருகே நின்ற கள்ளக்காதலி பிரியா அதனை ரசித்து பார்த்து உள்ளார். பின்னர் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் கொலையாளிகள் அனைவரும் பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து தனியாக நின்ற பிரியா அவ்வழியே வந்த காரில் சவாரி கேட்டு புழல் பகுதிக்கு தப்பி சென்ற போது போலீசாரின் சோதனையில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கைதான பிரியா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் கள்ளத் தொடர்புகள் அதிகமானதால் லட்சுமணன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டு அவ்வப்போது வந்து தனது குழந்தைகளை மட்டும் பார்த்து சென்று உள்ளார்.
கணவர் வீட்டுக்கு வராததால் மேலும் சந்தோஷம் அடைந்த பிரியா பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கோபால கிருஷ்ணன் தன்னுடன் தொடர்பை தொடர கூறியதால் ஏற்பட்ட மோதலில் அவரை மற்றொரு கள்ளக்காதலனை ஏவியே பிரியா தீர்த்து கட்டிவிட்டார்.
இந்த கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
- இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.
இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
- இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.
நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.
இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.
பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
- டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.
தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.
கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.
இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.
செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.
வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.
வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.
ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.
மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.