என் மலர்
நீங்கள் தேடியது "Teenager"
- பவானி ஆற்றின் கரையோரம் அருகே இருந்த வேப்பமரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது.
- இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் மகிழீஸ்வரன் கோவில் பின்புறம் பவானி ஆற்றின் கரையோரம் அருகே இருந்த வேப்பமரத்தில் சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து பெருந்தலையூர் கிராம நிர்வாக அலுவலர் பஞ்சநாதன் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூக்கு மாட்டி இறந்த கிடந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சிக்கண்ணன் (30) என தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை .
இதுகுறித்து கவுந்தபாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்தார்.
- தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அலெக்சாண்டருக்கு திருமணமாகி மனைவி லீலா உள்ளார்.
மதுரை
மதுரை மாகாளிப்பட்டி, கோதண்டராம் மில் ரோட்டை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அலெக்சாண்டருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அவர் திண்டுக்கல் மெயின் ரோடு, விளாங்குடி பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அலெக்சாண்டருக்கு திருமணமாகி மனைவி லீலா உள்ளார்.
- தேவகோட்டையில் வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கினர்.
- தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தேவகோட்டை
ராமநாதபுரம் மாவட்டம் வீரசங்கிலி மடத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் முகம்மது ஆசிப்(23). கூலி தொழிலாளி. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முகமதியர் பட்டணம் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முகமதுஆசிப் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நகராட்சி சமுதாய கூடம் அருகில் வந்தபோது எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த ஒருநபர் மோதுவது போல் வந்துள்ளார்.
இதனை முகமதுஆசிப் கண்டித்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போன் மூலம் சிலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ஆசிப்பை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
10-க்கும் மேற்பட்ட நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 5-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.
- தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார்.
- சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாகோட்டையை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகள் சகாயமேரி (வயது 61 ). திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சகாயத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டனர். அதில் சகாயமேரியின் தலையில் ரத்த காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.அதில் தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி தென்கரையை சேர்ந்த சாஸ்திரி (30) என்பவர் சம்பவத்தன்று புதிய நீதிமன்றம் அருகே நின்று கொண்டிருந்த சகாய மேரியை கற்பழித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சகாயமேரி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சாஸ்திரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சேதராப்பட்டில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கு இறுதி சடங்கு முடித்து விட்டு பின்னர் தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
சேதராப்பட்டில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டு அருகே தமிழக பகுதியான பூத்துறை பாரதி வீதியை சேர்ந்தவர் அன்பு (வயது23). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.
இவர் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வானூருக்கு சென்றார்.
அங்கு இறுதி சடங்கு முடித்து விட்டு பின்னர் தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சேதராப்பட்டு போலீஸ் நிலையம் எதிரே தனியார் கல்லூரி அருகே வந்த போது வானூர் காலனியை சேர்ந்த ஈழவேந்தன் என்பவர் திடீரென அன்புவை வழி மறித்தார்.
இதையடுத்து அன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரை ஈழவேந்தன் சரமாரியதாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அன்புவும், அவரது தாய் கஸ்தூரியும் அலறல் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே ஈழவேந்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அன்பு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து சேதராபட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமங்கலம் அருகே வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்கள் ரெயில் நிலையத்தில் பதுங்கியிருந்தபோது சிக்கினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பாரதிராஜா (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் ஜாமீன் பெற்று கடந்த 10-ந் தேதி பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு புதுப்பட்டியில் உள்ள டீக்கடையில் நண்பர் சரவணகுமாருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரதிராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
உடனிருந்த சரவணக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டியும், அவரது நண்பர்களும் என தெரியவந்தது. இதையடுத்து சந்தனபாண்டி, ராம கிருஷ்ணன், கோகுல்,பரத் பாக்கியராஜ் விக்கி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போலீசார் கைது செய்தனர். 5 பேரையும் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு 5 பேரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.
இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில் குன்னூர் அடியனூர் கிராமத்தில் கரியகோயில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
- இதையடுத்து 2 டியூப்களில் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் அவரது வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யையும் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில் குன்னூர் அடியனூர் கிராமத்தில் கரியகோயில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லாசர்கென்னடி தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தங்கராஜ் (வயது 41) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 டியூப்களில் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் அவரது வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி யையும் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
- அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரனகுமார்(34) பணிபுரிந்தார்.
ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரனகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் வீரனகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது குறித்து தாமதமாக தகவல் அறிந்த கார்த்திகா திருமங்கலம் பன்னிகுண்டு வந்து வீரனகுமாரிடம் கேட்கவே, அவரும் தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அவதூறாக பேசி திட்டியுள்ளனர்.
விரக்தியடைந்த கார்த்திகா இது குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரனகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த வெடியரசம் பாளையத்தில் கடந்த 8-ந் தேதி ஒரு மர்மகும்பல் ரூ.28 லட்சம், 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
- இந்த கொள்ளையில் 3 கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த வெடியரசம் பாளையம் பாலி காட்டைச் சேர்ந்தவர் மில் அதிபர் பிரகாஷ். இவரது பெற்றோரை கடந்த 8-ந் தேதி கட்டிப்போட்டு ஒரு மர்மகும்பல் ரூ.28 லட்சம், 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் அந்தியூரை சேர்ந்த போலி சாமியார் ரமேஷ், ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் உட்பட 18 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விக்கி என்ற விக்னேஸ்வரனை போலீசார் கோவையில் நேற்று கைது செய்தனர். அவரை குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளையில் 3 கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு கும்பலில் உள்ளவர்களுக்கு மற்றவர்கள் குறித்து சரிவர விவரங்கள் தெரியவில்லை. இதனால் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தில் 25 சதவீதம் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது.
இதனால் முழு பணத்தையும் மீட்கும் வகையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கொள்ளையர்களில் சிலரை விரைவில் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்படி விசாரிக்கும் பட்சத்தில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள் முழுவதும் மீட்கப்படும் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஆன்லைன் விளை யாட்டில் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் விளைாயாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
ஆன்லைன் விளை யாட்டில் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அந்த விளையாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுரேஷ் ஆன்லைன் மூலம் பதில் அளித்தார். சில நாட்கள் கழித்து அவருக்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் ஒரு கார்டும், ஒரு விண்ணப்பமும் இருந்தது. அந்த கார்டை சர்ச் செய்து பார்த்ததில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்துள்ளதாகவும், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது.
அதன்படி அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சுரேஷ் அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவருக்கு செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் கார் பரிசை பெற வேண்டுமானால் சர்வீஸ் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 250 செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி சுரேஷ் அந்த தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். அன்றைய தினமே சுரேசுக்கு செல்போனில் மேலும் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஜி.எஸ்.டி. கட்டணமாக ரூ.18 ஆயிரத்து 750 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அந்த தொகையையும் சுரேஷ் ஆன் லைன் மூலம் செலுத்தினார். இதனை தொடர்ந்து டி.டி.எஸ். வரிக்கு ரூ.31 ஆயிரத்து 718 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததின் அடிப்படையில் அந்த தொகைகையும் சுரேஷ் அனுப்பி வைத்தார்.
பின்னர் அதே நாளில் ரூ.49 ஆயிரத்து 500 கட்ட வேண்டும் என்று செல்போனில் மெசேஜ் வந்தால் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். பணம் மோசடி செய்யப்படுவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட சுரேஷ் மேசேஜ் அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்ட போது கார் பரிசுக்கான 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது என கூறி அந்த செல்போன் எண் இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன்பிறகு அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுரேஷ் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- ரெயில் விஜய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்க்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 25 ). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஹெட்போனை இணைத்து கொண்டு பேசியப்படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வந்த ரெயில் விஜய் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.