என் மலர்
நீங்கள் தேடியது "teenager arrested"
- திருமங்கலம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது விக்னேஸ்வரன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பிணியானார். மகள் 7மாத கர்ப்பிணியாக உள்ளதை அறிந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இது குறித்து அவர்கள் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
- சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே ஆத்தூர் ஏரிக்கரைப்பகுதியில்பிரம்மதேசம் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்பு அவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் ஓமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தமுரளி என்பதும் இவர் இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சேலம் கொல்லப்பட்டி துரைசாமி நகர் பகுதியில் தனது வீட்டின் முன்பு ரூ2.25 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
- அதிகாலை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் கொல்லப்பட்டி துரைசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 24). இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு ரூ2.25 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். இன்று அதிகாலை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் எதிரில்
உள்ள சுடுகாடு அருகே ஒரு
வாலிபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு
சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு பணியில் இருந்த பள்ளப்பட்டி போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் இளவரசன் மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் (24) என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.
கோவை,
மேட்டுப்பாளையம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு அறிவொளி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் வ.உ.சி வீதி பகுதியை சேர்ந்த கல்யாண சுந்தரம் (வயது 24) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார்.
பல்லடம்:
திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சங்கர் (வயது 34). இவர் தற்போது பொங்கலூரை அடுத்த தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனையிட்டதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நகர பகுதியில் ரோந்து சென்றனர்.
- கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் உள்ளிட்ட போலீசார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், கூடலூர் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவரை வாழப்பாடி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த இவர், திடீரென தலைமறைவானார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி சங்கர் பார்க் அருகே, கடந்த 2010-ம் ஆண்டு மாணவி ஒருவரை காதலிக்க வேண்டுமென வற்புறுத்திய வாலிபரை, அந்த மாணவியின் சகோதரரும், அவரது நண்பரும் இணைந்து கொலை செய்தனர்.
இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவரை வாழப்பாடி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த இவர், திடீரென தலைமறைவானார்.
இவரை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து முத்துகுமாரை வாழப்பாடி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார்
- அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் தலத்தெருவைச்சேர்ந்த விஸ்னுபிரியன் (வயது21),. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார். இதுகுறித்து நிரவி போலீசார் விஸ்னுபிரியனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- மயிலாடுதுறையில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திவர் கைது செய்யப்பட்டார்.
- 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் வள்ளலார் கோவில் முன்பு மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்திய போலீசார் அவரை சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதை கலந்த புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் குத்தாலம் ராஜகோபாலபுரம் மந்தக்கரை தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசாந்த் (வயது26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்,. தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியுள்ளார்,
- தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த பல்லவராயநத்தம் சேர்ந்தவர் கலாவதி (வயது 60). இவர் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கலா வதிக்கும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 43) என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. மேலும் மூதாட்டி கலாவதி அவ்வப் போது தண்டபாணியை ஒருமையில் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு தண்டபாணி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கலாவதியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது
.இதனால் கலாவதி அலறி கத்தியதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த பொது மக்கள் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து குடி போதையில் தண்டபாணி வெளியில் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது தண்டபாணியை பொதுமக்கள் மடக்கி பிடித்து௹௹௹னர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டபாணியை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலத்த காயம் அடைந்த மூதாட்டி கலாவதியை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மூதாட்டி கலாவதி உறவினர் சந்திர சேகர் முன் விரோதம் காரணமாக கலாவதியை தாக்கி கற்பழிக்க முயற்சி செய்ததாக புகார் அளித் ததின் பேரில் நெல்லிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 28 வயது மதிக்கத்தக்க பெண், அவரது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். .
- முருகேசன் (35) என்பவர், அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போன் மூலம் விடியோ எடுத்ததாக கூறிப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண், அவரது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். வீட்டை ஒட்டி குடியிருக்கும் முருகேசன் (35) என்பவர், அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போன் மூலம் விடியோ எடுத்ததாக கூறிப்படுகிறது.
இது குறித்து, அப்பெண், கணவரிடம் நடந்ததை கூறினார். பெண்ணின் கணவர் நண்பர்களின் உதவியுடன் முருகேசனின் செல்போனில் இருந்து விடியோவை கைப்பற்றினார். விடியோ எடுத்த முருகேசனை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். அய்யனார் என்ற வாலிபர் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்
- மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். ஏரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). அ.தி.மு.க. பிரமுகர். இவர் அதேபகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது டீக்கடையை காலி செய்யகோரி அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அய்யனார் கடையின் வேலியை பிரித்து போட்டு, அண்ணா துரையை அசிங்கமாக திட்டியுள்ளார்.இதனால் மன உளைச்சல் அடைந்த அண்ணாதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதையடுத்து இவரது உறவினர்கள் அண்ணாதுரையின் உடலை பண்ருட்டி சித்தூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு விரைந்து சென்ற புதுப்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அவரது மனைவி, போலீசாரிடம் இன்று கொடுத்த புகாரின் பேரில் அய்யனாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.