search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tehreek e Insaf"

    • அக்டோபர் மாதம் வேந்தர் தேர்வு செய்யப்படுவார்.
    • இம்ரான் கான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்றனர்.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பல்வேறு வழக்குளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார. சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் இம்ரான் கான், இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

    "இம்ரான் கான் தனது குழுவிற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு அளித்தார். விண்ணப்பத்தின் பரிசீலனை தற்போது நடைபெறுகிறது. இது ஒரு மரியாதைக்குரிய பதவியாகும். இம்ரான் கான் வேந்தராக தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்தது. அப்படி நடந்தால் முதல் ஆசிய நபர் ஆவார். இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. ஆசியா மற்றும் உலகத்திற்கும் சிறந்த சாதனையாக கருதப்படும்" என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கான லண்டன் செய்தி தொட்பாளர் சயீத் ஜுல்ஃபிகர் புகாரி தெரிவித்துள்ளார்.

    ஹாங் காங்கின் கடைசி பிரட்டிஷ் கவர்னரான கிறிஸ் பாட்டன் கடந்த பிப்ரவரி மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்த விலகினார். இதனால் வேந்தர் பதவி காலியாக உள்ளது.

    10 வருட வேந்தர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரங்கள் அக்டோபர் மாதம் வரை வெளியிடப்படாது. அக்டோபர் மாதம் கடைசியில் வாக்கெடுப்பு நடைபெறும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்பு முடித்த இம்ரான் கான் 1975-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

    தலைசிறந்த கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், கிரிக்கெட் விளையாடும் காலத்தில் இம்ரான் கான் பிளேபாய் போன்று வாழ்ந்தவர். பிரிட்டிஷ் கிசுகிசு பத்திரிகையில் தொடர்ந்து இடம் பிடித்தவர்கள் ஒருவர்.

    நடிகை ஜெமிமா கோல்டுஸ்மித் உள்ளிட்ட மூன்று பேரை திருமணம் செய்துள்ளார். இவர் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன.
    • அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமம்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "முதலில் எங்களது கட்சி சின்னத்தை சதி செய்து முடக்கினர். தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டன. மக்களின் ஆணை திருடப்பட்டு இருப்பது அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமமானது."

    "நடைபெற்று முடிந்த தேர்தலில் எனது கட்சியினர் மட்டும் மூன்று கோடி வாக்குகளை பெற்றனர். இதே வாக்குகளை தேர்தலை சந்தித்த மற்ற 17 கட்சிகளும் கூட்டாக பெற்றன. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன."

    "தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து பெஷாவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். பி.டி.ஐ. கட்சி இடங்களை தேர்தல் ஆணையம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது," என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் அரசு ஹெலிகாப்டரை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் 7-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெக்ரிக்-இ -இன் சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் வருகிற 11-ந்தேதி அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் இவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆட்சி நடத்தியது.

    அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 72 மணி நேரம் உபயோகித்து இருப்பதாகவும் அதற்குரிய வாடகை கட்டணம் ரூ.2 கோடியே 17 லட்சம் செலுத்தவில்லை என்றும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய பொறுப்புடமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    தேர்தல் பணியில் இருந்ததால் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 7-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

    கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரியாக பெர்வேஷ்கட்டாக் பதவி வகித்தார். அவர் மற்றும் 4 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். #ImranKhan
    ×