என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tejas aircraft"
- இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம்.
- இந்த சோதனை போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
பெங்களூரு:
இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் இலகுரக போர் விமானம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.
தேஜாஸ் எம்.கே.1ஏ என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்நிலையில், இதன் முதல் விமானம் எல்.ஏ.5033 இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக புறப்பட்டு விண்ணில் பறந்தது.
தலைமை பயிற்சி பைலட், குரூப் கேப்டன் கே.கே.வேணுகோபால் (ஓய்வு) விமானத்தை ஓட்டினார். 18 நிமிடங்கள் வானில் பறந்து வட்டமடித்து பின்னர் தரையிறக்கினார். இந்தச் சோதனையானது போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது
ஒரே நேரத்தில் விமானத்தை வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கான முக்கிய மைல்கல்லை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் அடைந்திருக்கிறது.
தேஜாஸ் எம்.கே.1ஏ விமானத்தில் மேம்பட்ட எலக்ட்ரானிக் ரேடார், தகவல் தொடர்பு அமைப்புகள், கூடுதல் தாக்குதல் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்கள் உள்ளன.
- பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்றார்.
- அப்போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.
பெங்களூரின் எலஹங்கா விமானப்படை தளத்தில், பாதுகாப்புத் துறை மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் 'ஏரோ இந்தியா - 2019' சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றுவருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சி நாளை நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. #AeroIndia2019 #PVSindhu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்