என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Telangana State Anniversary"
- மாநில அந்தஸ்து வழங்கியதன் மூலம் தெலுங்கானா மக்களின் சுயமரியாதையை சோனியா காந்தி பாதுகாத்துள்ளார்.
- தெலுங்கானா மாநிலத்திற்கு தனி சின்னம் மற்றும் மாநில பாடல் தயார் செய்யப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது. வருகிற 2-ந் தேதி தெலுங்கானா மாநில தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தெலுங்கானா அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 3 நாட்கள் தொடர் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சோனியா காந்திக்கு பாராட்டு விழா நடத்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. இதற்காக முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கானா மாநில அந்தஸ்து வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோனியா காந்திக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது அழைப்பிற்கு அவர் சாதகமாக பதிலளித்தார்.
பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மாநில அந்தஸ்து வழங்கியதன் மூலம் தெலுங்கானா மக்களின் சுயமரியாதையை சோனியா காந்தி பாதுகாத்துள்ளார்.
சோனியா காந்திக்கு பாராட்டு விழா பிரஜாலா பலானா பகுதியில் பிரம்மாண்டமாக நடத்தப்படும். இதில் மாநிலம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கலந்து கொள்வார்கள்.
தெலுங்கானா மாநிலத்திற்கு தனி சின்னம் மற்றும் மாநில பாடல் தயார் செய்யப்படுகிறது. இசையமைப்பாளர் கீரவாணி ஆட்சேபம் தெரிவித்ததால் மற்றொரு இசையமைப்பாளர் மூலம் தெலுங்கானா மாநில பாடல் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில சின்னத்தில் அரசாட்சியின் பிரதிபலிப்பு இருக்காது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தெலுங்கானா மக்களின் போராட்ட உணர்வை பிரதிபலிக்கும் வகையில் சின்னம் வடிவமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.