என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "temple priest"
- சுந்தரமூர்த்தி கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
- சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே க.அலம்பலம் கிராமத்வதை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 70). கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சசிகலா ஆகியோர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கடந்த 17-ந் தேதி சென்றனர். அங்கு சுந்தரமூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தியின் ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு உதவி திட்ட அடையாள அட்டையை 20-ந்தேதி கேட்டுள்ளனர். இதையடுத்து சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார். வீட்டின் சாவி மற்றும் ஆதார் கார்டு உள்ள இடத்தை கூறினார்.
அதனை எடுத்து உள்ளே சென்று ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு அட்டையை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போடுமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர் வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடனடியாக சசிகலாவிடம் கூறினார். உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சசிகலா, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கச்சிராயபாளையம் போலீசாரிடம் நேற்று (21-ந் தேதி) புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கச்சிராயபாளையம் போலீசார், கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.
- முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் முத்துசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜோதிமணி. முத்துசாமியும் ஆலாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருக்கும் மாரியப்பன் ( 38) என்பவரும் நண்பர்கள்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிமணிக்கு போன் செய்த மாரியப்பன், அவரது மனைவிக்கும் முத்துசாமிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாகவும் அவரை கண்டித்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.அப்போது என் குடும்பத்தை சீரழித்த முத்துச்சாமியை சும்மா விட மாட்டேன் என்று மாரியப்பன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை உடுமலை திருமூர்த்திமலை ரோட்டில் முத்துச்சாமி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார் முத்துச்சாமி மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தன் மொபட்டின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய மாரியப்பன், நீ உயிரோடு இருப்பதை விட செத்து தொலைவதே மேல் என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியுடன் தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு குடும்ப நண்பரை பூசாரி காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கோல்சேவாடி என்ற பகுதியில் வசிக்கும் பெண், தமக்கு அடிக்கடி தலைவழி வருவதாக தனது அண்டை வீட்டு தோழியிடம் கூறியுள்ளார். அதற்கு அப்பகுதியில் இருக்கும் கோவில் பூசாரி தீரா நோய்களையும் தீர்த்து வைப்பதாகவும், அவரை சென்று சந்திக்கும்படியும் தோழி அறிவுரை கூறியுள்ளார்.
இதையடுத்து, தனது கணவருடன் அந்த பெண் கோவில் பூசாரியை சென்று சந்தித்தார். கோவிலில் உள்ள ஒரு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அந்த பெண்ணின் கணவரை பூஜைக்கு வேண்டிய பழங்கள் வாங்கிவருமாறு சாமியார் உத்தரவிட்டு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகே அவரது உண்மை முகம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. கணவர் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார் அந்த 77 வயது சாமியார்.
இதையடுத்து, அந்த பெண் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, அந்த புகாரின் அடிப்படையில் அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பூசாரியின் லீலைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். #Maharashtra #TemplePriestArrested
கேரளாவுக்கு 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்றார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் பல்வேறு அரசு விழாவில் ஜனாதிபதி பேசி வருகிறார்.
நாளை திருச்சூரில் நடக்கும் விழாவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் திருச்சூர் வரும் ஜனாதிபதி கொலை செய்யப்படுவார் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உஷாரான உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடினர். குன்னங்குளம் உதவி கமிஷனர் சைபர் செல் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.
தீவிர தேடுதல் வேட்டையில் மிரட்டல் விடுத்தது திருச்சூர் விரைக்கல்லில் உள்ள பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்