search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THANKED THE CHIFMINISTER"

    • முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
    • கட்டணமில்லா பேருந்து சேவையில் 3.53 கோடி பேர் பயணம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரசு நகரப் பேருந்துகளில் இது வரை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் 3.53 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 அரசுப் போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 420 பேருந்துகள் 564 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு நாளைக்கு 2.65 லட்சம் பயணிகள் சராசரியாக பயணம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 398 மாற்றுத்திறனாளிகள், 15 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 20 திருநங்கைகள் என சராசரியாக 86,340 பேர் வீதம் இதுவரை 3.53 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ள பட்டுள்ளனர்.

    குறிப்பாக மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையும் பேருந்தின் முகப்பில் ஒட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினந்தோறும் கூலி வேலை, பணிநிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்திட்டம் பேருதவியாக உள்ளதால் பெண்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தின் கீழ் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரி டம் கனிவுடனும், பேருந்து நிறுத்தத்தில் எத்தனை பெண்கள் காத்திருந்தாலும் அவர்களை நிறுத்தி பேருந்தில் ஏற்றவும் பேருந்து நடத்துனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் அனைவரும் நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்து கொண்டனர் என கலெக்டர் தெரிவித்தார்.

    ×