search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the 8-8-8 rule"

    • மூன்று பங்காகப் பிரித்து செயல்படுங்கள்.
    • உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

    ஒரு நாளைக்கு எட்டுமணிநேர விகிதத்தில் மூன்று பங்காகப் பிரித்து ஒவ்வொரு எட்டு மணிநேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதன் மூலம், நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதை அடிப்படையாகக் கொண்டதே 8-8-8 விதி.

    ஒரு நாளில் முதல் எட்டு மணி நேரத்தை வேலைக்காக ஒதுக்க வேண்டும். இரண்டாவது எட்டு மணி நேரத்தில் ஓய்வு எடுப்பது. நமக்குப் பிடித்த விஷயங்களை செய்வது அல்லது நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை செய்யலாம். கடைசி எட்டு மணி நேரத்தை சீரான தூக்கத்துக்காக ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.

    எட்டு மணிநேர வேலை:

    ஒரு நாளின் முதல் எட்டு மணி நேரத்தில், நாம் தொடர்ந்து வேலையில் ஈடுபடும்போது நம்முடைய உடல் அதற்கு ஏற்றார்போல் ஒத்துழைப்பு கொடுக்கும். இது நம் செயல்திறனை அதிகரித்து, நம்முடைய தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும், வாழ்க்கை சமநிலை அடையவும் ஊதவும். இந்த எட்டு மணி நேரத்தில்தான் நமது உடலும், மனமும் முழுமையான இயக்கத்தில் இருக்கும்.

    நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும் திட்டமிடல், ஆளுமை, புரிதல், நினைவாற்றல், ஒழுக்கம். சமயோசித புத்தி, சிக்கலை நீர்க்கும் ஆற்றல், நேர்மறை எண்ணம், தெளிவான சிந்தனை போன்றவற்றை அதிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

    நமக்கான எட்டு மணி நேரம்:

    இரண்டாவது எட்டு மணி நேரத்தில் நம் உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு அல்லது புத்துணர்வு அளிக்கும் செயப்பாடுகளில் ஈடுபடலாம். இது நம் உடலில் உள்ள ஸ்டிரெஸ் ஹார்மோன்களால் உண்டான பிரச்சினைகளை நீக்கி, உடலையும் மனதையும் புத்துணர்வு அடையச் செய்யும். இந்த எட்டு மணி நேரத்தில் உடற்பயிற்சி, நடனம், இசை, உடல் உழைப்பு கொண்ட வேலை, புத்தகம் வாசித்தல், புதிய சமையல் முயற்சி, விளையாட்டு, புதிய முயற்சிகளை மேற்கொள்வது, பிடித்தவற்றை பார்ப்பது, தோட்டக்கலை, தையல் என நமக்குப் பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடலாம். இவை மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களின் ஈரப்பை அதிகரித்து. மன அழுத்தத்தை குறைக்கும்.

    உடலுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன், ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகுக்கும். செய்யும் வேலை குறித்த கவனமான அணுகு முறையை வளர்த்து, மூனை செறிவின் அளவை அதிகரிக்கும். ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த ஊக்குவித்து, மனம் அலைபாய்வதையும், கவனச்சிதறலையும் கட்டுப்படுத்தும்..

    எட்டு மணி நேர சீரான தூக்கம்:

    ஒரு நாளைக்கு தொடர்ந்து எட்டு மணி நேர சீரான தூக்கம் அவசியமானது. இதுவே நாள் முழுவதும் உடலும், மனமும் வேலையால் பெற்ற சோர்வு, பதற்றம், தசை இறுக்கம் மற்றும் அழுத்தத்தை விடுவித்து, ஓய்வு நிலைக்கு திரும்புவதற்கு உதவும். உடலின் உள்உறுப்புகள் சீராக இயங்க வழிவகுக்கும். மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, படைப்பாற்றல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் ஒவ்வொரு செல்களும் புத்துயிர் பெறவும், சருமப்பொலிவு பெறவும், செரிமானம் சீராக நடைபெறவும் நல்ல தூக்கம் அவசியமானதாகும்.

    ×