search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The arrangements have been made by the Dhanvantri family"

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கிறது
    • 64 நாட்கள் தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பூஜை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி முரளிதரசுவாமிகளின் 63-வது ஜெயந்தி பூர்த்தி , பீடத்தின் 18-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மஹோத்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    64 நாட்கள் தொடர்ந்து காலை , மாலை இரு வேளைகளிலும் நடைபெறும் யாகத் திருவிழாவும், 64 நாட்களிலும் பரத நாட்டிய மாணவிகள், கலைஞர்கள் பங்கேற்கும் பரதத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு -கேது பெயர்ச்சி மகா யாகம் நாளை மறுநாள் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் , மாலையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகமும் நடைபெறுகிறது.

    ராகு கேது பெயர்ச்சி யை முன்னி ட்டு மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, விருச்சி கம், தனுசு, கும்பம், மீனம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு-கேது திசை, புக்தி நடைபெறுபவர்களும் மகா யாகத்தில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து, சுவாமி தரிசனம் செய்து பயன் பெறலாம் என பீடாதிபதி முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்

    ×