search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The arrangements were made by the Dhanvantri family"

    • பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து ஆசி பெற்று சென்றனர்
    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பல்வேறு யாகங்கள், பூஜைகள், சுமங்கலி பூஜை, நாட்டிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கி கடந்த 16-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 18-ந்தேதி முடிய 64 நாட்கள் நடைபெறும் மஹோத்சவம்-2023 விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு -கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் நேற்று மாலை நடைபெற்றது.

    ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், மாலையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகமும் நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமத்துடன், அஷ்ட நாக பூஜையும், இரவில் சர்ப்ப பலி பூஜைகளும் நடைபெற்றது.

    ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம்,ரிஷபம்,மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு-கேது திசை, புக்தி நடைபெறுபவர்களும் மகா யாகம் மற்றும் ராகு கேது அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து பீடாதிபதி முரளிதர சாமிகளிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்

    ×