search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the causeway collapsed due to heavy rains."

    • கயிறு கட்டி ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்
    • மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் நீண்ட காலமாக தரைப்பாலம் இருந்தது கடந்த ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக தரைப்பாலம் உடைந்து சென்றது.

    இந்த தரைப் பாலம் வழியாக தண்டுகானூர், மாங்குப்பம், காரக்காரன்கொட்டாய், மங்களம்பள்ளி, என சுமார் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த தரைப் பாலம் வழியாக சென்று வந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறுக்கு செல்லும் கிளை நீரோடை கொரட்டி பகுதியில் இருந்து தொடங்கி ஊத்தங்கரை சென்று முடிவடைகிறது

    தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொரட்டி நீரோடையில் தற்போது அதிக வெள்ளம் செல்வதால் தரைப் பாலம் உடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.

    தரை பாலத்தில் வெள்ளம் அதிகமாக செல்வதால் தரை பாலத்தைக் கடக்க அப்பகுதி மக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கரையில் இருந்து மற்ற கரைக்கு ஆபத்தான முறையில் கடக்கின்றனர். மேலும் வாகனங்களும் மிகவும் சிரமப்பட்டு செல்கிறது.

    அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் மாவட்ட நிர்வாகம் இப்பகுதிக்கு தரை பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இதே தரைப் பாலத்தில் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் வீட்டிலிருந்து காலை கொரட்டி பகுதிக்கு தேநீர் அருந்த கடைக்கு சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×