என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "the chariot of awareness"
- கள்ளக்குறிச்சியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு ரதம் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கிஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- இவ்வாண்டின் கருப்பொ ருள் “குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னே ற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போ ம் என்பதாகும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் கருப்பொ ருள் "குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னே ற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போ ம் என்பதாகும் " இதில் விழிப்புணர்வு ரதம் மற்றும் தனியார் கல்லூரி மாண வர்களை கொண்டு மக்கள் தொகை கட்டு ப்பாட்டின் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழி ப்புணர்வு பதாகைகளை ஏந்தி செல்லும் விழிப்பு ணர்வு பேரணி ஆகியவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணி நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது. மேலும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டு ப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ரதம் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் ஜூலை 12 முதல் ஜீலை 24 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முதல்வர் உஷா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் பொது சுகாதாரப் பணிகள் ராஜா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ க்கண்காணிப்பாளர்நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.